பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து
மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி
தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்
கலித்தாழிசை
பாடல் 6
ஓதக் கடலின் ஒளிமுத்தி னாரமும்
சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்
மாதக்க வென்று வருணன் விடுதந்தான்
சோதிச்
சுடர்முடியாய் தாலேலோ சுந்தரத் தோளனே தாலேலோ
ஓதக் கடலின் ஒளிமுத்தி னாரமும் - ஓலி எழுப்பும் கடலின் ஒளி பொருந்திய முத்தால் ஆன ஆரமும்
ஓதம்னா பேரொலி, ஆர்ப்பரிப்பு. அதனால ஓதம்னால கடல்னு பண்புப் பெயர் உண்டு. படைகள் ஆர்பரிக்கும் போருக்கும் ஓதம்னே பெயர். பொருள்:
சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும் - உயர் வகைப் பவளமும் வண்ணச் சரிகையும்
சந்தம் - வண்ணம். இந்தப் பொருள் கொண்டு இணை மற்றும் பாடல் வகைக்களுக்கு இனிமையான தமிழ் சொல் கூறலாம்.
சந்த விருத்தம் - வண்ணப் பெருக்கு
இங்க பாருங்க.
மாதக்க வென்று வருணன் விடுதந்தான் - உனக்குச் சிறப்பானது என்று மழைக் கடவுள் தந்தனுப்பி இருக்கிறான்
மா - பெரியது, சிறப்பானது
மாதக்க - உன் சிறப்புக்குத் தக்கது
சோதிச் சுடர்முடியாய் தாலேலோ சுந்தரத் தோளனே தாலேலோ - அழகிய தோள்கள் ஏந்தும் புகழ் வீசும் முடியுடையவனே கண்ணுறங்கு
பதவுரை:
மழைக்கும் கடலுக்கும் தலைவன் வருணன். அவன் தன்னிடத்தே இருந்து விளையும் பொருள்களான முத்து, பவளம் போன்றவற்றோடு வண்ணம் நிறைந்த சரிகைகளையும் உனக்குச் சிறப்பாக இருக்கும் என்று அனுப்பி இருக்கிறான். அழகிய தோள்களில் அமைந்த சிறப்பு வாய்ந்த முடி சூடிய கண்ணனே கண்ணுறங்கு
4 comments:
இன்னிக்கி வருணன் முறையா, Birthday Gift-க்கு? :))
இதே மாதிரி எனக்கும் தினம் ஒரு பிறந்தநாள், தினம் ஒரு பரிசு வேணும் கண்ணா!
//சோதிச் சுடர்முடியாய் தாலேலோ சுந்தரத் தோளனே தாலேலோ//
அருமை!
சுந்தரத் தோளுடையான் யாருப்பா? கள்ளழகர் தானே? மருதைக்காரவுக வந்து சொல்லுங்க!
//சந்தச் சரிவளையும்//
கடலில் தோன்றும் முத்து, பவழம் சரி! அது என்ன சரி(கை)?
அது சந்தமா? சரிகையா? வளையா? விளக்கம் ப்ளீஸ்!
நீரின் தெய்வமான வருண பகவான், கடலிலிருந்து கிடைக்கப்பெறும் பொருள்களை அன்பளிப்பாக அளிக்கிறார்.
முத்து, பவழம் போன்ற மிகுந்த மதிப்புடைய பொருள்களுடன், கைகளுக்கு சங்கு வளையல்களையும் தருகிறார். ;-)
சந்தச் சரிவளைன்னா சங்குவளையல்கள் என்பது சரியா முகவை மைந்தன்?? ;-))
சரிவளைன்னா ஒரு வகை வளையல்னு தான் பொருள் இருக்கு. சந்தச் சரிவளை - அழகிய வளையல். தமிழ் சொன்னாப்ல, வருணன் தருவதால், சங்கால் செய்யப் பட்ட வளையல். இனிய ஒலி ஏற்படுத்தும் வளையல்னும் பொருள் கொள்ளலாம்.
Post a Comment