Wednesday, December 2, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 7

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு (தலையை நிமிர்த்தி, முகத்தை அசைத்து ஆடும் செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 7
துப்புடை யாயர்கள் தம்சொல் வழுவாது ஒருகால்
தூய கருங்குழல்நல் தோகை மயிலனைய*
நப்பினை தன்திறமா நல்விடை யேழவிய
நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே!*
தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்
தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டிய* என்
அப்ப! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.

பதவுரை:

துப்புடை ஆயர்கள் தம் சொல் வழுவாது - வலிமை நிறைந்த, திறமைசாலிகளான ஆயர்கள் முன்னம் ஒரு காலத்தில் சொல்லி வைத்த சொல் மாறாமல், அவர்கள் வாக்குப்படியே நடந்து கொண்ட நம் கண்ணபிரான்.... அடியவர்கள் வேண்டுகோள் அனைத்தையும் மதித்து நடப்பவன், அவர்கள் துயர் தீர்ப்பவன்- நம்பிரான். இப்ப என்ன வம்பு வந்துச்சு?? யாருக்கு என்ன ஆச்சு?? (துப்பு - வலிமை, திறமை; வழுவாது - பிறழாது)

ஆருக்கும் ஒன்னும் ஆகலை... எல்லாம் நல்ல சேதிதான். அது என்ன சேதின்னு பாட்டுல பாப்போம். மேல படிக்கலாமா... ம்ச்! தொடர்ந்து படிக்கலாம் வாங்க...

தூய கருங்குழல் நல் தோகை மயிலனைய நப்பினை -
ஆகா அதுதான் சேதியா?? ஆஹா! புரிஞ்சுப்போச்சு எனக்கு இப்ப புரிஞ்சுபோச்சு...
ஆமாம் அதேதான். ஒரு குட்டிக்கதை.


கண்ணன், யசோதையின் மைந்தனா, ஆயர்பாடியில வளர்ந்துட்டு இருக்கும் போதே, அ
தாவது கண்ணன் சின்ன பாலகனா இருக்கும் போதே, யசோதையின் சகோதரனும், துவரைப்பதியின் மன்னனுமான கும்பன் என்பவரின் புதல்வியான நப்பின்னைதான் கண்ணனின் வருங்கால மனைவி ன்னு சின்ன வயசுலேயே முடிவு செஞ்சுட்டாங்க.

கண்ணன் தான் எல்லோரின் உள்ளங்கவர் கள்வனாச்சே! நப்பின்னைக்கு மட்டும் பிடிக்காம போகுமா?? நப்பின்னையும் கண்ணன் பால் காதல் கொள்கிறாள். ஆனா, நப்பின்னையோட அப்பா, ஒரு நிபந்தனை வைக்கிறார். தன்னிடம் உள்ள ஏழு அடங்காத முரட்டுக் காளைகளை யார் அடக்குறாங்களோ அவங்களுக்குத்தான் நப்பின்னையை மணம் முடித்துக் கொடுப்பேன்னு சொல்லிடறாரு.

எத்தனையோ பேர் முயன்றும் முடியாமல் தோத்துப் போக, நம்ம மதுரைவீரன், மாயக்கண்ணன் வந்து ஏழு காளைகளையும் அனாயசயமாக அடக்கி, நப்பின்னையைத் திருமணம் செய்து ஆயர்கள் சொன்ன சொல்லையும் மெய்யாக்கிவிட்டார்.

இந்த கதையைத்தான் இந்த பாட்டுல சொல்லியிருக்கார், பெரியாழ்வார்.

தூய கருங்குழல்நல் தோகை மயிலனைய நப்பினை தன் - மயிலின் நீண்ட தோகையைப் போன்ற பொலிவான நீண்ட கருங்கூந்தலையுடையவளான நப்பின்னையின்; தோகை மயிலினைப் போன்ற சாயலுடைய நப்பின்னை.

திறமா நல்விடை யேழவிய நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே! - நப்பின்னையின் தந்தைக்குச் சொந்தமான வலிமை மிகுந்த, ஏழு காளைகளை ஒடுக்கிய வல்லமையுடைய தலைவனே! (திறமா - வலிமை; விடை- காளை; அவிய - இறக்க, ஒடுங்க; நாதன் - தலைவன்)

தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டிய என் அப்ப! - காணாமல் சென்ற பிள்ளைகளை எல்லாம் தனியொரு ஆளாகச் சென்று மீட்டுவந்து, அவர்கள் தாயிடம் சேர்ப்பித்த என் அப்பனே! (தப்பின - காணாமல் போன)

எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே -
எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடுவாயாக! வலிமை மிகுந்த காளையைப் போன்றவனே எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே!

பொழிப்புரை:

வலிமை மிகுந்த ஆயர்கள், உன் சிறு வயதில் முடிவு செய்திருந்த சொல்லை மெய்யாக்கும் வண்ணம், தோகை மயிலனைய சாயலுடைய நப்பின்னையை மணம் முடிப்பதற்காக, அவள் தகப்பனாரின் ஏழு காளைகளையும் அடக்கி நப்பின்னையைக் கரம்பிடித்த தலைவனே! காணாமல் சென்ற பிள்ளைகளை எல்லாம் தனியாளாகச் சென்று மீட்டு வந்து பாதுகாப்பாக அவர்கள் அன்னையிடம் ஒப்புவித்த என் அப்பனே! எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடுவாயாக! வலிமை மிகுந்த காளையைப் போன்றவனே ஒரே ஒரு முறை செங்கீரை ஆடுகவே!

28 comments:

அக்காரக்கனி- In Lover said...

நல்லா இருக்கு தொடருங்க

நன்றி தமிழ் ஐயா!

Regards
http://srikamalakkanniamman.blogspot.com
Rajesh

jagadeesh said...

மகாலட்சுமி, பூமாதேவியாய், ஆண்டாளாய் அவதரித்தாள். ஆண்டாளை பற்றி கதைகள் உண்டு.
மற்றொரு தாயான சத்தியபாமா பற்றி எந்த கதையும் இல்லையா, தெரியாமல் கேட்கிறேன், தயை கூர்ந்து
தெரிவிக்கவும்.

In Love With Krishna said...

idhuvarai indha kadhai theriyaadhu...periyazhwar aruzhal, ungal blog-mulam therinjikkitten...nanri :)

முகவை மைந்தன் said...

வந்துட்டான்யா, வந்துட்டான்யா! நலவரவு! விரைவில் கலக்கிறேன்.

MSATHIA said...

களை கட்டுதே...

தமிழ் said...

நன்றி இராஜேஷ்!

கண்டிப்பாகத் தொடர முயற்சிக்கிறேன்...

தமிழ் said...

@ஜெகதீஷ்..

கிருஷ்ணாவதாரத்தில், கண்ணனுக்குப் பல மனைவியர் உண்டு. துவாரகா வில் பாமா, ருக்மணி மற்றும் பலர் உள்ளனர். அனைவருமே இறைவன் மேல் அளவுகடந்த அன்புடையவர்கள்.

சத்தியபாமா:

கண்ணபிரானின் மூன்றாவது மனைவி. இவர் பூதேவியின் அம்சமாவார். நரகாசுரன் வதத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.

தமிழ் said...

@In Love With Krishna...

எல்லாம் அவன் செயல்... வருகைக்கு மிக்க நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

தமிழ் said...

@முகவை மைந்தன்...

அவ்வ்வ்..... சீக்கிரம் வாங்க! வந்து சோதியில ஐக்கியமாகுங்க...

தமிழ் said...

@சத்யா...

:-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//முகவை மைந்தன் said...
வந்துட்டான்யா, வந்துட்டான்யா!//

யாரு? யாரு? :)

//நல்வரவு! விரைவில் கலக்கிறேன்//

காபியா? கேப்பச்சீனோவா? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//யசோதையின் சகோதரனான, அயோத்தியின் மன்னன் நக்னஜித் தின் மகளான சத்யா என்கிற நப்பின்னை//

அப்பா பேரு நக்னஜித்! பொண்ணு பேரு தூய தமிழில் நப்பின்னையா?

அப்போ ஆயர் குடி, கும்பனின் மகள் இல்லையா நப்பின்னை?

மேலும் நக்னஜித் அயோத்திக்கு அரசனா? கோசல நாட்டுக்கு அரசனா?

நப்பின்னையை ஏறு தழுவி அல்லவா மணந்தான் கண்ணன்! இது தமிழ் வழக்கம்=ஆயர் குல வழக்கம் அல்லவா? நக்னஜித் போன்ற அரசர்கள் சுயம்வரம் அல்லவா வைப்பார்கள்?

நப்பின்னை - பெயர்க் காரணம் மற்றும் சிறு குறிப்பு வரைக! :)

தமிழ் said...

அப்பப்பா, எத்தனை கேள்விகள் கேயாரெஸ்...

அப்பா பேரு நக்னஜித்! பொண்ணு பேரு தூய தமிழில் நப்பின்னையா?//

இருக்கலாம். அது காரணப் பெயரா? இல்லை, மொழிப் பெயர்த்து வெச்சிருக்காங்களா ன்னு எனக்குத் தெளிவா தெரியாதுங்க. நப்பின்னை வரலாற்றைத் தெளிவாக அறிந்தவர்கள் எவரேனும் வந்து பதில் சொல்ல வேண்டும். தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.

-------------------
அப்போ ஆயர் குடி, கும்பனின் மகள் இல்லையா நப்பின்னை?//

நக்னஜித் தோட இன்னொரு பேருதான் கும்பன். யசோதையோட சகோதரன்தான் இந்த கும்பன்.

-----------------------
மேலும் நக்னஜித் அயோத்திக்கு அரசனா? கோசல நாட்டுக்கு அரசனா?//

அயோத்தி
-----------------------

நப்பின்னையை ஏறு தழுவி அல்லவா மணந்தான் கண்ணன்! இது தமிழ் வழக்கம்=ஆயர் குல வழக்கம் அல்லவா? நக்னஜித் போன்ற அரசர்கள் சுயம்வரம் அல்லவா வைப்பார்கள்?//

கண்ணன், காளைகளை அடக்கினதும் சுயம்வரத்து அப்பத்தான். சுயம் வரம் நடந்த போது மற்ற மன்னர்களால அடக்க முடியாம போக, கண்ணன் ஒருவனால் மட்டுமே அந்த ஏழு காளைகளையும் அடக்க முடிந்தது.

------------------------------

நப்பின்னை - பெயர்க் காரணம் மற்றும் சிறு குறிப்பு வரைக! :)//

தெளிவாகத் தெரிந்தவர்கள் எவரேனும் சொன்னால் சிறப்பு.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

srimad bhagavatam.org

(32) Of the most religious ruler of Kaus'alya named Nagnajit there was a divine daughter Satyâ who was also called Nâgnajitî, o King. (33) None of the kings could marry her without defeating seven uncontrollable bulls with the sharpest horns who vicious as they were had no tolerance for the smell of warriors. (34) Hearing of her being attainable for the one who had defeated the bulls, went the Supreme Lord, the Master of the Sâtvatas, to the Kaus'alya capital surrounded by a large army. (35) The lord of Kos'ala standing up [upon His arrival], and worshipful seating Him with substantial offerings and so on, was in return also greeted. (36) The daughter of the king seeing that the suitor of her desire had arrived prayed: 'May, provided that I keep to the vows, the fire [of sacrifice] make my hopes come true; let Him, the Husband of Ramâ become my husband! (37) He of whose lotus-like feet the one from the lotus [Brahmâ] and the master of the mountain [S'iva] together with the various rulers of the world hold the dust on their heads, He who for His pastime with the desire to protect the codes of religion that He Himself instigated each time [that He's around] assumes a body, with what can He, that Supreme Lord, by me be pleased?'

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

(38) He [Nagnajit] said to the One worshiped further the following: 'O Nârâyana, o Lord of the Universe, what may I who am so insignificant do for You Filled with the Happiness of the Soul?'

(39) S'rî S'uka said: 'O child of the Kurus, the Supreme Lord pleased to accept a seat, with a smile spoke to him with a voice deep as a [rumbling] cloud. (40) The Supreme Lord said: 'O ruler of man, for a member of the royal order following his own dharma is to beg for something condemned by the learned; nevertheless do I beg for your friendship with an eye at your daughter for whom We, though, offer nothing in return.'

(41) The King said: 'Who else but You, o Superior Lordship, would in this world be a groom desirable for my daughter; You, on Whose body the Goddess resides and never leaves, are the only One harboring the qualities! (42) But, by us has before a condition been set, o best of the Sâtvatas, for the purpose of testing the prowess of the suitors of my daughter who is looking for a husband. (43) These seven wild bulls, o hero, are untamable; a great number of princes have broken their limbs being defeated by them. (44) If they are subdued by You o descendant of Yadu, have You my approval as the groom for my daughter, o Husband of S'rî.' (45) Thus hearing of the condition set, tightened the Master His clothes and did He, turning Himself into seven, subdue them as if it concerned a simple game. (46) Tying them up with ropes dragged S'auri them broken in their pride and strength behind Him like He was a boy playing with a wooden toy. (47) The astonished king pleased then gave Krishna his suitable daughter who by the Supreme Lord, the Master, was accepted according the vedic injunctions. (48) The queens, with attaining Krishna as the dear husband of the princess, felt the highest ecstasy upon which great jubilation took hold of them. (49) Conchshells, horns and drums resounded together with songs and instrumental music; the twice-born pronounced blessings and joyful men and women finely dressed adorned themselves with garlands.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
This comment has been removed by the author.
kannabiran, RAVI SHANKAR (KRS) said...

(50-51) As a wedding gift gave the mighty king ten thousand cows, three thousand excellently dressed maidens with golden ornaments around their necks, nine thousand elephants, a hundred times as many chariots with a hundred times as many horses and to that a hundred times as many men as there were horses. (52) He, the king of Kos'ala, with his heart melting of affection had the couple seated on their chariot and then sent them off surrounded by a large army. (53) Hearing of this blocked the [rival] kings, in their strength just as broken by the Yadus as the bulls were before, incapable of accepting the frustration the road along which He was taking His bride. (54) They, releasing volleys of arrows, were by Arjuna, the wielder of Gândîva who acted like a lion in his desire to please his Friend, driven back like they were vermin. (55) The son of Devakî, the Supreme Lord and Chief of the Yadus, taking the dowry with Him then arrived in Dvârakâ where He lived happily with Satyâ.

தமிழ் said...

Thanks a lot KRS.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தமிழ் said...
Thanks a lot KRS//

:)
நோ! நோ! இத்தினி தகவலும் கொடுத்தது உங்கள் கருத்தை மறுத்து உரைக்கத் தான்! :)

1. நக்னஜித் கோசல அரசன்!
2. அவன் மகள் சத்யா, நப்பின்னை அல்ல!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நப்பின்னை என்பவள் தமிழ்க் குலமகள்!
ஆயர் கோன் கும்பனின் மகள்!
குறிஞ்சிக்கு ஒரு வள்ளி போல், முல்லைக்கு ஒரு நப்பின்னை!

இவளைத் துவரைப்பதி அரசனான கண்ணன் காதல் கொண்டு, ஏறு தழுவி மணம் புரிந்தான்! - இதுவே பண்டைத் தமிழ் இலக்கியம் காட்டுவது!

வட-தமிழ் பண்பாட்டுக் கலப்புகள் ஏற்பட்ட பின், முருகன் ஸ்கந்தன் ஆனது போல், மாயோன் விஷ்ணு ஆனது போல், நப்பின்னையும் வேறொன்றாகி மறைந்து போனாள்!

இவளை நீளா தேவியாகவும், நக்னஜித் மன்னனின் மகளான சத்யாவாகவும், ஏன் ராதையாகவும் கூடச் சிலர் சொல்வதுண்டு! ஆனால் நப்பின்னை நப்பின்னையே!

நற்+பின்னை = நப்பின்னை!
செல்ல+இளைய மகள் என்று பொருட்படும்!
இவளுக்கு ஒரு அண்ணனும் உண்டு! நற்செல்வன்!

இருவரையுமே கோதை திருப்பாவையில் காட்டுகிறாள்!
1. நனைத்து இல்லம் சேறாக்கும் "நற்செல்வன்" தங்காய்
2. உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே "நப்பின்னாய்"
3. கொத்தலர் பூங்குழல் "நப்பினை" கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
4. செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்!!

இன்னும் ஆழ்வார்கள் பலரும், சங்கத் தமிழ் மரபை ஒட்டி, நப்பின்னை-கண்ணன் என்ற காதலர்களையே காட்டிச் சென்றுள்ளார்கள்!

அதற்கும் முன்பே

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆழ்வார்களுக்கும் முன்பே, சிலப்பதிகாரம் நப்பின்னையைக் காட்டுகிறது...குரவைக் கூத்தில், இன்னும் பல இடங்களில் இவ்வாறு நப்பின்னையைச் சொல்லி, கண்ணகி முன் ஆடுகின்றனர் ஆயர்குடி மக்கள்!

வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத்
தண்டாக் குரவைதான் உள்படுவாள்-கொண்டசீர்
வையம் அளந்தான் தன் மார்பின் திருநோக்காப்
பெய்வளைக் கையாள் நம்"பின்னை" தானாம் என்றே...

குரவைக் கூத்தில் ஆடும் பெண், நப்பின்னையைப் போல் அழகாக இருக்கிறாள்! அதனால் தான் போலும், மாயோன், தன் மார்பில் உள்ளவளையும் நோக்க மறந்து, இவளை நோக்குகிறான்! என்கிறது பாடல்!

பின்னர் வரும் இலக்கியங்களில், மணிமேகலையில் வரும் நப்பின்னை, சீவக சிந்தாமணியிலும் தென்படுகிறாள்!

நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன்
நில மகட்குக் கேள்வனும் நீள் நிரை "நப்பின்னை"
இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே!

முருகன் வள்ளியை மணந்தது போல், மாயோன் நப்பின்னையை மணந்தது போல்...சீவகன் தன் மகளான கோவிந்தையை மணக்க வேண்டும் என்று கேட்கிறான் அவள் தந்தை!

ஆயர் குலத்து தமிழ் மகள், தலை மகள் நம் நப்பின்னை!
தமிழுக்கே உரிய தலைமகள், பின்னாளில் கடல்கோளால், பல செய்திகள் அழிந்தொழிந்து, மர்மப் பெண் ஆகி விட்டாள்!

ஆனால் ஆழ்வார்கள் தொல்லிசைத் தமிழ்க் குடியை விடுவதாக இல்லை! அதனால் தான் எல்லா ஆழ்வார்களும், நப்பின்னையை அதிகம் முன்னிறுத்தி, பாசுரங்களைப் பொழிந்தனர்! பாசுரம் என்றாலே பா+சுரம் (இயல்+இசை) அல்லவா! தொல்லிசைத் தமிழ்க் குடியான நப்பின்னை அன்றி, யார் ஆங்கே கொலுவிருக்க முடியும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இரண்டாம் தமிழ்ச் சங்கம் நடைபெற்ற கபாடபுரத்தில், கண்ணன் (துவரைக் கோமான்) கலந்து கொண்டான் என்பது இறையனார் உரை! அவனே மாயோன் என்னும் கண்ணன்!

மலி திரை ஊர்ந்து, தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி மேல் சென்று, மேவார் நாடு இடம்படப்,
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய
"நல் இனத்து ஆயர்"
- இதுவே கலித் தொகை காட்டும் காட்சி + சாட்சி!

மாயோனாகிய கண்னன் கண்டு, பழகி, காதலுற்ற தலைமகளே நப்பின்னை! அவளுக்காகவே ஏறு தழுவி அவளையும் அவள் காதலையும் வாழ்வித்தான்! முருகன்-வள்ளியைப் போலவே இதுவும் இலக்கியங்களில் பெரிதும் பேசப்படுகிறது!

இதை ஒட்டியே ஆழ்வார்கள், சங்கத் தமிழ் மரபை முன்னிறுத்தி, தமிழ்த் தலைமகளையே, தம் பாசுரங்களில் முன்னிறுத்தினர்! இதோ ஒவ்வொன்றாக!

1. பெரியாழ்வார்:

பூணித் தொழுவினில் புக்குப்
புழுதி அளைந்த பொன் மேனி,
...
"நப்பின்னை" காணில் சிரிக்கும்,
மாணிக்கமே! என் மணியே!
மஞ்சனம் ஆட நீ வாராய்!

2. ஆண்டாள்:
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே "நப்பின்னாய்"

கொத்தலர் பூங்குழல் "நப்பின்னை" கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்

செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
"நப்பின்னை" நங்காய் திருவே துயில் எழாய்!!

3. திருமழிசையாழ்வார்:

பின்னும் ஆயர் "பின்னை தோள்
மணம் புணர்ந்தது" அன்றியும்,
உன்ன பாதம் என்ன சிந்தை
மன்ன வைத்து நல்கினாய்!

4. திருமங்கை மன்னன்:

இந்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும்,
இன்பன் நற்புவி தனக்கு இறைவன்,
தந்துணை ஆயர் பாவை "நப்பின்னை"
தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்
என்துணை, எந்தை தந்தை தம் மானைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே!

5. பேயாழ்வார்:
"பின்னைக்காய்" - முற்றல்
முரி ஏற்றின் முன் நின்று மொய்ம்பு ஒழித்தாய், மூரிச்
சுரி ஏறு சங்கினாய் சூழ்ந்து!

6. நம்மாழ்வார்:

கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் - கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் "பின்னை" தோள்கள்
மணந்ததும் - மற்றும் பல,
மாயக் கோலப் பிரான் தன் செய்கை
நினைந்து - மனம் குழைந்து,
நேயத் தோடு கழிந்த போது எனக்கு -எவ்வுலகம் நிகரே?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
This comment has been removed by the author.
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
This comment has been removed by the author.
kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இப்படி,
சிலப்பதிகாரம் முதற்கொண்டு,
ஆழ்வார்களின் ஈரச் சொற்கள் வரை,
அனைத்திலும்,
கண்ணனின் பின்னையாக,தமிழ்க்குடித் தலைமகளாக நப்பின்னையே நிற்கின்றாள்!

அப்பேர்ப்பட்ட நப்பின்னை, பின்னாளில் பண்பாட்டுக் கலப்புகளில் காணாது போனாள்! ஆனால் இன்றும் ஆழ்வார் பாசுரங்களில் வாழ்ந்து, ஆலயச் சாற்றுமறைகளில் எல்லாம் மணம் கமழ்க்கின்றாள்!

நப்பின்னை நங்கை திருவே துயிலெழாய்!
நப்பின்னை நங்கை திருவே துயிலெழாய்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

எனவே...
நப்பின்னை என்பவளை ஏதோ வடபுலப் பெண்ணாகவோ, நக்னஜித் மகள் என்றெல்லாம் காட்டி, இறையியலில் தமிழ்த் தொன்மத்தைச் சிதைக்க வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்!

ஏற்கனவே தொலைந்து போன பெண் நப்பின்னை! அவள் தகவல்களாவது இறைத் தமிழுலகில் நிலைக்கட்டும்! பதிவிலும் திருத்தி விடுங்கள்!

முகவை மைந்தன் said...

@ரவி
இனிது, இனிது உம்சொல் கேட்பது. தகவலை விட தரவுகள் நெஞ்சை அள்ளுகின்றன. உங்க தமிழ் கேட்டு உருகி நின்றேன், வாழ்க.

//இறையியலில் தமிழ்த் தொன்மத்தைச் சிதைக்க வேண்டாம்//
இவ்வளவு காட்டுகளுக்குப் பின் யார் மறுப்பார்:-)

தமிழ் said...

மிக்க மிக்க நன்றி கேயாரெஸ்!

இறையியலில் இனித் தமிழ்த்தொன்மைத்தை சிதையாமல் பார்த்துக் கொள்கிறோம்!

அறியாமல் செய்து விட்ட பிழைக்கு தயவுசெய்து மன்னிக்கவும்!