பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
(தளர்நடைப் பருவம்)
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் 1
குறிப்பு: இப்பாடலை இருமுறை சேவிக்க வேண்டும்.
தொடர் சங்கிலிகை சலார் பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்ப*
படுமும்மதப்புனல்சோர வாரணம்பைய நின்று ஊர்வதுபோல்*
உடன்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க*
தடந்தாளிணை கொண்டு சார்ங்கபாணி தளர்நடைநடவானோ.
பொருள்:
குழந்தை பிறந்தது முதல் ஒவ்வொரு நிலையையும் கடந்து வரும் வளர்ச்சியும், ஒவ்வொரு நாளும் அவை செய்யும் லீலைகளும், சட்டு, சட்டென்று மாற்றும் பாவனைகளும், பார்க்க பார்க்க அதன் அன்னைக்கு உண்டாகும் பெருமையும், மகிழ்ச்சியும் எழுத்தாலோ, சொல்லாலோ விவரிக்க இயலாத ஒன்று.
தத்துவஞானிகளும், மேதைகளும் மக்களின் நலனுக்காக உரைத்த தத்துவங்களும், சொல்லப்படாத பல தத்துவங்களையும் குழந்தைகள் நமக்குச் சொல்லாமல் சொல்லிவிடும்.
வருசத்துக்கு ஒருமுறை வந்துட்டு வியாக்கியானம் பேசி உசுர வாங்காதன்னு நீங்க சொல்றது கேக்குது. எனக்கு கொஞ்சம் இஸ்ஸ்ஸ்டார்ட்டிங்க் இம்சையா இருக்கு... தயவுசெய்து கொஞ்சம் மன்னிச்சூஊ..
பிள்ளைகள், தட்டுத் தடுமாறி, முட்டி மோதி கீழவிழுந்து, விழும்போது யாராவது பார்த்தா அழுது, பார்க்காட்டி 'விடுறா கைப்புள்ள, வாழ்க்கையில இதெல்லாம் சகசமபா ன்னு, அதுவா எழுந்து தத்தித் தத்தி வீறுநடை போடற அழகு இருக்கே... அட! அட!!
இப்போ நாம பார்க்கப் போகிற பத்துப் பாடல்களும் "என் பிள்ளை எட்டு வைத்த நடையைப் போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை" ன்னு, குழந்தைகள் தத்தி தத்தி தளர் நடை நடக்கும் பருவத்தைப் பற்றியவையே!
முதல் பாடலில், குட்டிக் கண்ணன் எட்டு வைத்து நடப்பதை யானையின் நடையுடன் ஒப்பிட்டுப் பாடுகிறார், தாயுமாகிய பெரியாழ்வார்.
தொடர் சங்கிலிகை சலார் பிலாரென்னத் தூங்கு பொன்மணி ஒலிப்ப - எந்த யானைக்கு எப்போ மதம் பிடிக்கும் ன்னு யார்க்கும் தெரியாது. ஆனா, எந்த யானைக்கு மதம் பிடிச்சாலும் என்ன நடக்கும் ன்னு எல்லார்க்கும் தெரியும். அதனால முன்னெச்செரிக்கையா யானையை இரும்புச் சங்கிலியால் கட்டிப் போட்டுருப்பாங்க.
அப்படி நான்கு கால்களிலும் விலங்குப் பூட்டி இரும்புச் சங்கிலியால கட்டப்பட்டிருக்கறதால யானை நடக்கும் பொழுது சங்கிலியின் உராய்வினால் (சலார் பிலார் ன்னு)சத்தம் உருவாகும்.
நம்ம அஞ்சன வண்ணனும், இளஞ்சூரியன் சாந்தெடுத்து செய்த பொலிவான பொன் ஆபரணங்கள் அணிந்துள்ளான். அவ்வாபரணங்களில் தொங்குகின்ற பொன்மணிகள், குட்டிக் கண்ணனின் நடைக்கேற்ப அசைந்து இசைக்கின்றன.
(தொடர் - விலங்கு; சலார் பிலார் - ஒலிக் குறிப்பு; தூங்கு - தொங்குகின்ற)
படுமும்மதப்புனல் சோர வாரணம் பைய நின்று ஊர்வது போல் - கிளர்ச்சியுற்ற அந்த யானையின் மதநீர், அதன் இரு கன்னங்களிலும் வழிந்தோட, கால்கள் பிணைக்கப்பட்டுள்ளதால் அகலமாக வைக்க இயலாது, அருகருகே அடி வைத்து மெல்ல மெல்ல நடப்பதை போல
(சோர - சொரிய, வழிய; வாரணம் - யானை; பைய - மெல்ல)
உடன்கூடிக் கிண்கிணி யாரவாரிப்ப உடைமணி பறை கறங்க - முதல் அடியுடன் சேர்த்துப் படிங்க... அப்போ உங்களுக்கு முதல் வரியின் அர்த்தமும் புரிஞ்சுடும்.
... தூங்கு பொன்மணியொலிப்ப, உடன்கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப உடைமணி பறை கறங்க - கண்ணன் அணிந்துள்ள பொன் ஆபரணங்களின் மணிகள் ஒலி எழுப்ப, அவ்விசைக்கேற்றவாறு காலில் அணிந்துள்ள கிண்கிணி சதங்கைகள் ஆர்பரிக்க, இடையில் கட்டிய அரைஞாண் கயிற்றிலுள்ள மணிகளும் இவற்றோடு சேர்ந்து பறை ஓசையினைப் போல் பெருமளவு சத்தம் உண்டாக்க
(கிண்கிணி - சதங்கை, கால் கொலுசு; உடைமணி - அரைஞாண் கயிற்றிலுள்ள மணிகள்; கறங்க - ஒலிக்க, சப்திக்க)
தடந்தாளிணை கொண்டு சார்ங்கபாணி தளர்நடைநடவானோ - தன்னுடைய பெரிய பாதங்களை மெல்ல மெல்ல தன் கால் எட்டுகின்ற அளவு அடி வைத்து, சாரங்கம் என்ற வில்லினை ஆயுதமாகக் கொண்டவன் தளர்நடை நடக்கமாட்டாயோ?!
(தடந்தாள் - பெரிய பாதம்; சார்ங்கம் - பெருமாள் கொண்டுள்ள பஞ்சாயுதங்களில் ஒன்றான வில்லின் பெயர்)
பதவுரை:
சாரங்கம் என்ற வில்லினை கையில் ஏந்தியவனே! கால்களில் விலங்கு பூட்டி, இரும்புச் சங்கிலியால் பிணிக்கப்பட்டிருக்கும் மதயானையானது, அச்சங்கிலி உருவாக்கும் சலார் பிலாரென்னும் பெருத்த ஓசையுடன், தன் கன்னங்களில் மதநீர் வழிந்தோட, மெல்ல மெல்ல அசைந்து நடப்பதை போல குட்டிக் கண்ணனின் மார்பில் அணிந்துள்ள பொன் ஆபரணங்களில் இணைக்கப்பட்டுள்ள பொன்மணிகள் சப்திக்க, அவன் செவ்விதழ்களிலிருந்து சிந்தும் நீரானது மார்பில் விழுந்து, வயிற்றில் வழிந்தோட, பொன்மணிகளின் ஒலியோடு பாதசதங்கையின் கிண்கிணிகள் ஆரவாரிக்க, இவற்றுடன் இணைந்து இடுப்பிலுள்ள அரைஞாண் கயிற்றின் மணிகள் பறையொலியினைப் போல் சப்திக்க, தன் பஞ்சு போன்ற பெரியபிஞ்சு பாதங்களை மெல்ல மெல்ல எடுத்து வைத்து தளர்நடை நடந்து வாராயோ!
16 comments:
மீள் துவங்கியாச்சா? நன்று! :)
சீக்கிரம் அப்பாவை முடிச்சிட்டு பொண்ணு கிட்ட வாங்க! I am eager for my thOzhi :)
சலார் பிலார்-ன்னு லோக்கலா எழுதி இருக்காரே ஆழ்வார்! :)
மும்மத வாரணம் = யானைக்கு மும்மதமா? அப்படி-ன்னா என்ன?
குட்டிக் கண்ணன் எச்சி ஒழுகி கிட்டே நடக்கிறானா? Shame, Shame... :)
உங்க சாப்ட்டர் முடிஞ்சிடுசிள்ளே நனச்சேன் .
இப்படி திடீர்னு Re Entry கொடுக்றீங்க Congragulation:)
யானைக்கு மத நீர் வருது!
மத நீர் என்றால் மதம் பிடித்தால் வருமா!
அப்ப கண்ணனுக்கு மதம் பிடிக்காதே எப்படி ஜொள்ளு ஊத்துது! . கண்ணனை பாத்துதானே எல்லா பொண்ணுங்களும் ஜொள்ளு விடுவாங்க !
Great:)
@கேயாரெஸ்...
ஆமாங்க... இறைவன் அருளால் மீளத் துவங்கியிருக்கிறேன். இது எதுவரை செல்லும் என்று தெரியவில்லை.
எல்லாம் இறைவன் செயல்! :-)
------------
பெரியாழ்வார்க்கு பாஸ்போர்ட், வீசா லாம் கிடைக்காததால லோக்கலா எழுதிட்டாரு... :-)
பாசுரங்கள் அனைத்தும், எளியனுக்கு எளியனாய்... அடியனுக்கு அடியனாய் இருப்பவன் மேல் அடியவர்களால் பாடப்பட்டவை. கேட்டாலும் புரியாத, மனதிலும் பதியாத ஆடம்பர சொல்லாடலில் என்ன பயன்?
மும்மத வாரணம் ன்னா...
இந்து,கிறித்துவ மற்றும் இசுலாமிய யானைகள் மூன்றும் சேர்ந்த மத நல்லிணக்க வாரணம். :-)
மும்மத புனல் சோர வாரணம் ன்னுதான வந்திருக்கு. மும்மத வாரணம் ன்னா இருக்கு.
யானைக்கு மதம் பிடிக்கையில், அதன் இரண்டு கன்னங்களிலும் மற்றும் குறியிலும் உண்டாகும் நீர்.
@நரசிம்மரின் நாலாயிரம்...
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!:-)
என்னங்க இது, சாப்டர் ன்னு தமிழ் சினிமா வில்லன் வார்த்தையெல்லாம் பயன்படுத்துறீங்க. me only childhood boy, ok!
ஆமாம். யானைக்கு மதம் பிடிக்கும் போது, யானை முகத்தன் முன்னாடி நாம தலையில குட்டிப்போமே, பொட்டுன்னு கூட சொல்வாங்களே.. அந்த பகுதியில இருந்து வெளிவரக்கூடிய ஒரு தார் மாதிரியான திரவம்.
வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி! தொடர்ந்து வாங்க!
பட்டத்துக்குக் கூடத்தான் வால் இருக்கு, அதுக்காக குரங்கு பறக்குமா ன்னு கேக்கற மாதிரி இருக்கு. :-))
நான் எழுதின பொருள் விளக்கம் புரியலையோ. #ஐயம்
விளக்கம் அருமையாக புரிகிறது
:)
. chசும்மா கண்ணனை வம்புக்கு இழுத்தேன்...........-----...:)
thanks for starting again..have ben awaiting ur posts :))
kinkini-nna enna? :)
i really love this post...indha paasuram avvalavu azhagaa irukku...thanks for posting :))
//சலார் பிலார்-ன்னு லோக்கலா எழுதி இருக்காரே ஆழ்வார்! :)//
@KRS: so that ennai pola local thamizhargalukku puriyum :))
@ILWK
லோக்கலாக எழுதக் கூடாது என்பது ஆன்மீகப் பெரியவர்கள் பந்தலில் என்னை இடித்து உரைத்தது! அதைத் தான் சொன்னேன்...ஆழ்வாரும் அருமையான லோக்கல் மொழிகளில் எழுதியுள்ளார் என்று! நாட்டுப்புற வழக்கம்-ன்னா இலக்கியம் இல்லை என்று சில ஆன்மீக/இலக்கியப் பெருந்தலைகள் நினைப்பது வருத்தத்திற்குரியது!
முக்கியாமான சேதி சொல்ல மறந்து போனேன்...இப்பாசுரத்துக்கு!
தொடர் சங்கிலிகை சலார் பிலாரென்ன - என்னும் இப்பாசுரத்தைத் தான் இராமானுசர் பாட...அதைக் கேட்டு....
துலக்க மன்னனின் மகள் அறையில், சொப்புப் பொருளாய்க் கிடந்த, சூறையாடிய ஆலயத்தின் திருநாரணன் உருவச் சிலை, அதே "சலார் பிலார்" என எழுந்து வந்தது என்பது கதை!
அந்தத் திருநாரணன் சிலையை இன்றும் கர்நாடக மாநில மேலக்கோட்டை ஆலயத்தில், உற்சவ சிலையாக (ஊருலாச் சிலை) பார்க்கலாம்!
அந்தச் சிலையில் மோகித்து, தன் உயிரையே விட்ட சூரத்தானி என்னும் முஸ்லீம் இளவரசிக்கு = துலக்கா நாச்சியார் என்னும் பெயர் சூட்டி, அவளையும் அச்சிலையின் பாதங்களிலேயே எழுந்தருளப் பண்ணினார் இராமானுசர்!
எம்பெருமான் சிலைக்கு கீழே ஒரு துலக்கப் பெண்ணா? என்ற எதிர்ப்புகளையும் மீறி, அந்த நிகழ்ச்சி நடந்தேறியது!
இன்றும் துலக்கா நாச்சியாரை, திருநாரணன் தாளிணையில் காணலாம், Melkote என்னும் அத்தலத்தில்!
Post a Comment