Monday, November 2, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 3 - 10

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து மூன்றாம் திருமொழி - மாணிக்கங்கட்டி தாலப்பருவம் - குழந்தை கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் கலித்தாழிசை பாடல் 10 வஞ்சனை யால்வந்த பேய்ச்சி முலையுண்ட அஞ்சன வண்ணனை ஆய்ச்சிதா லாட்டிய செஞ்சொல் மறையவர் சேர்புதுவைப் பட்டன்சொல் எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே
பொருள்:
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட - உன்னைக் கொல்லும் தீய எண்ணத்துடன் வந்த பூதகி என்னும் பேயின் முலைப்பால் உண்ட அஞ்சன வண்ணனை ஆய்ச்சிதா லாட்டிய - கருமை நிறக் கண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய செஞ்சொல் மறையவர் சேர்புதுவைப் பட்டன்சொல் - சிறப்பான சொற்களை மறை ஓதுவோர் நிறைந்த சிறீவில்லிபுத்தூர் வாழ் பட்டன் (பெரியாழ்வார்)பாடியதை எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே - ஒன்று விடாமல் படிப்பவர்க்கு இடர் என்றும் இல்லை. பதவுரை: கண்ணனைக் கொல்லும் வஞ்சத்துடன் வந்த பூதகியின் முலைப்பால் உண்ட மைநிறக் கண்ணனை இடையர் குல ஆய்ச்சி தாலாட்டிய சிறப்பினை மறை ஓதுவோர் நிறைந்த திருவில்லிப் புத்தூர் பட்டன் பாடிச் சிறப்பித்த பாடல்களை குறைவின்றி சொல்பவர்களுக்கு துன்பம் என்பது இல்லை. பொதுவாக இது போன்ற பத்துகள் அல்லது தொகுப்புப் பாடல்களின் இறுதியில் நூலாசிரியர் பற்றிய குறிப்பும் இந்தப் பாடல்களைப் பாடுவதால் கிடைக்ககூடிய பயன்கள் பற்றிய குறிப்பும் வருகிறது. பின்னாடி ஒரு ஒப்பீடு செஞ்சு பாக்கணும்.

2 comments:

Anonymous said...

பொதுவாக இது போன்ற பத்துகள் அல்லது தொகுப்புப் பாடல்களின் இறுதியில் நூலாசிரியர் பற்றிய குறிப்பும் இந்தப் பாடல்களைப் பாடுவதால் கிடைக்ககூடிய பயன்கள் பற்றிய குறிப்பும் வருகிறது. பின்னாடி ஒரு ஒப்பீடு செஞ்சு பாக்கணும்.:::)))


ஆமாமா! டெஸ்ட் பண்ணி பாக்கணும்! ஆழ்வார்கள் சொல்வது பொய் ஆகாது! என்று நம்புவோம்

தமிழ் said...

அண்ணா,

ஒரு ச்சின்னூன்டு திருத்தங் ண்ணா...

இந்தப் பாசுரம் கலித்தாழிசை இல்லீங் ண்ணா... தரவு கொச்சகக் கலிப்பா ங்ண்ணா... :-))