Wednesday, December 2, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 10

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு (தலையை நிமிர்த்தி, முகத்தை அசைத்து ஆடும் செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 10
செங்கமலக் கழலில் சிற்றிதழ்போல் விரலில்

சேர்திக ழாழிகளும் கிண்கிணியும்* அரையில்

தங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின்

பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்*

மங்கள வைம்படையும் தோள்வளையும் குழையும்

மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக*

எங்கள் குடிக்கரசே! ஆடுக செங்கீரை

ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே.


பதவுரை:

செங்கமலக் கழலில் சிற்றிதழ்போல் விரலில் சேர்திக ழாழிகளும் கிண்கிணியும்
- மழலைச் செல்வன் மாதவனின் மென்மையான செந்தாமரைப் போல் சிவந்த பாதங்களில் ஒலிக்கின்ற கிண்கிணிகளும், அச்சிறு பாதத்திலிருந்து, சிறு மொட்டுகள் அரும்பி இருப்பது போல் அமைந்திருக்கின்ற விரல்களில் அணிந்துள்ள மோதிரங்களும் (கழல் - பாதம்; ஆழி - மோதிரம்; கிண்கிணி - கால்சதங்கை, கொலுசு)

அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன்மணியும் - உன் சிற்றிடையில் அணிவிக்கப்பட்டுள்ள, பொன்னாலான அரைஞாண்கயிற்றில் பூட்டப்பட்டுள்ள நல்ல மாதுளம்பூவுடன், பொன்மணிகளும் சேர்ந்து இசைக்க (அரையில் பொன்வடம் - அரைஞாண்கயிறு)

மோதிரமும் கிறியும் மங்கள வைம்படையும் தோள்வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக - கைவிரல்களில் அணிந்துள்ள மோதிரம் ஒளி வீச, கைகளில் அணிந்துள்ள பவள வளையல் பளபளக்க, மார்பில் உள்ள மங்கல ஐம்படையும் சேர்ந்தாட, உன் தோளில் உள்ள தோள்வளையுடன் காதில் அணிந்துள்ள மகரகுண்டலமும், வாளியும்(ஒரு வகைக் காதணி), உச்சியில் சுட்டியும் உன் திருமேனி வண்ணத்திற்கு எடுப்பாய் அமைந்து உன்னுடன் சேர்ந்தாடும் வண்ணம் (கிறி - குழந்தைகளின் முன்னங்கைகளில் அணியும் ஒருவகை பவள அணிகலன்; குழை - குண்டலம்; வாளி - ஒருவகை காதணி; சுட்டி - நெற்றிச்சுட்டி)

எங்கள் குடிக்கரசே! ஆடுக செங்கீரை ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே - எங்கள் ஆயர்குடி ஆதவனே செங்கீரை ஆடுவாயாக! ஏழுலகும் ஆள்பவனே செங்கீரை ஆடுக ஆடுகவே!

பொழிப்புரை: ஆயர்குல மன்னவா! உன் சிவந்த செங்கமலப்பாதத்தில் அணிந்துள்ள கிண்கிணிகள் ஒலி இசைக்க, அச்சிறு பாதத்தில் அரும்பிய சிறிய விரல்மொட்டுகளில் அணிந்துள்ள மோதிரங்கள் மின்ன, உன் சிற்றிடையில் ஒட்டியுள்ள பொன்னாலான அரைஞாண்கயிறும் அதனுடன் கோர்க்கப்பட்டுள்ள நல்ல மாதுளம்பூவினோடு, பொன்மணிகள் கலகலக்க, கைகளில் - விரல் மோதிரங்களுடன், முன்கையில் உள்ள பவள வளையல் பளபளக்க, மார்பில் அணிந்துள்ள ஐம்படையும் ஆட, காதில் மகரக் குண்டலத்துடன், வாளியும் சேர்ந்தாட, உச்சியில் நெற்றிச்சுட்டித் தானாட செங்கீரை ஆடுகவே! ஏழுலகும் ஆள்பவனே ஆடுக ஆடுகவே!

13 comments:

நாடி நாடி நரசிங்கா! said...

இவ்ளோ நகை போட்டுக்கிட்டு செங்கீரை ஆடனும்னா
ரொம்ப கஷ்டம் . வெயிட் ஓவரு :))

நாடி நாடி நரசிங்கா! said...

திருப்பதி பெருமாள்தான் செங்கீரை ஆடனும் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இவ்ளோ நகை போட்டுக்கிட்டு செங்கீரை ஆடனும்னா
ரொம்ப கஷ்டம் . வெயிட் ஓவரு :))//

ரிப்பீட்டே! :)

ஆனால் குன்றம் எடுத்த கண்ணனுக்கு இந்த வெயிட் எல்லாம் ஜூஜூபி! :)

@தமிழ்/முகில்
செண்பகப் பூவுக்கெல்லாம் படம் போட்டீக! இந்த நகைக்கெல்லாம் படம் போட மாட்டீங்களா? உங்க கிட்ட இருக்கிற நகையெல்லாம் போட்டாலே, பார்த்தாச்சும் ஆசை தீர்த்துப்போம்-ல்ல? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

1. ஆழிகளும்
2. கிண்கிணியும்
3. பொன்வடமும்
4. மாதுளையின் பூவொடு
5. பொன்மணியும்
6. மோதிரமும்
7. கிறியும்
8. மங்கள ஐம்படையும்
9. தோள்வளையும்
10. குழையும்
11. மகரமும்
12. வாளிகளும்
13. சுட்டியும்
காட்டுங்க! காட்டுங்க! :)

In Love With Krishna said...
This comment has been removed by the author.
In Love With Krishna said...

Perumal darisanam thiruvadiyil irundhu-nnu solvaangala?
1) செங்கமலக் கழலில் சிற்றிதழ்போல் விரலில் சேர்திக ழாழிகளும் கிண்கிணியும்
2) அரையில் தங்கிய பொன்வடமும்
3)தாள நன் மாதுளையின் பூவொடு பொன்மணியும்
4) மோதிரமும்
5) கிறியும்
6)வைம்படையும்
7)தோள்வளையும்
8) குழையும்
9)மகரமும்
10)வாளிகளும்
11)சுட்டியும்
Perumal thiruvadiyil arambithu sutti varai paadrar periyazhwar! :))
Mayiliragai mattum vittadhu eno?
Anyone knows?

குமரன் (Kumaran) said...

மெட்டிக்கு ஆழி என்றும் ஒரு பெயர் உண்டா? அழகே அழகு.



செங்கீரைப் பருவத்தில் இன்னும் மயிலிறகை திருமுடியில் வைத்துக் கொள்ளவில்லை போல. அதனால் தான் ஆபாதசூடம் அடிமுதல் முடிவரை இருக்கும் அணிகலன்களைப் பாடிய பெரியாழ்வார் மயிலிறகைப் பாடாமல் விட்டுவிட்டார். :-)

தமிழ் said...

@நரசிம்மரின் நாலாயிரம்...

ஆமாமாம் ரொம்பவே கஷ்டந்தான்... ;-)

ஆனாலும், உலகத்தையே வாய்க்குள்ள வெச்சிருக்குறவனுக்கு இதெல்லாம் ஜகஜமப்பா...

தமிழ் said...

@கேயாரெஸ்...

ஆனால் குன்றம் எடுத்த கண்ணனுக்கு இந்த வெயிட் எல்லாம் ஜூஜூபி! :)

@தமிழ்/முகில்
செண்பகப் பூவுக்கெல்லாம் படம் போட்டீக! இந்த நகைக்கெல்லாம் படம் போட மாட்டீங்களா? உங்க கிட்ட இருக்கிற நகையெல்லாம் போட்டாலே, பார்த்தாச்சும் ஆசை தீர்த்துப்போம்-ல்ல? ///

படத்துல போடணும்னா, இனிமேல் நான் எங்காவது போய் இராபின்ஹீட் ஆழ்வாரா மாறினாதான் உண்டு.... :-)

படத்துல இருக்குற கண்ணனே ஓரளவு பாட்டுல வர்ரற நகையெல்லாம் போட்டுருக்காரே...

தமிழ் said...

@ Narasimmarin Naalaayiram said...

திருப்பதி பெருமாள்தான் செங்கீரை ஆடனும் :)//

திருப்பதி பெருமாள் ஆடினா அது செங்கீரையா இருக்காது... ஆலமரமாத்தான் இருக்கும்...

என்னோட கியூட்டான குட்டிக்கண்ணன் முன்னாடி, இந்த பெரும் ஆள் ல்லாம் செல்லாது செல்லாது...

தமிழ் said...

@ In Love With Krishna said...

மயிலிறகு காற்றுல ஆடுறது, குட்டிக்கண்ணனோட போட்டிப் போட்டு ஆடுற மாதிரி இருந்துருக்கும்... அதால அது ரிஜெட்டட்...

தமிழ் said...

@குமரன்...

ஆழி - மோதிரம்

மெட்டி - கால் மோதிரம்; கால் ஆழி

In Love With Krishna said...

@தமிழ் :
//மயிலிறகு காற்றுல ஆடுறது, குட்டிக்கண்ணனோட போட்டிப் போட்டு ஆடுற மாதிரி இருந்துருக்கும்... அதால அது ரிஜெட்டட்...//
:)))))