Wednesday, December 2, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 5 - 11

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு (தலையை நிமிர்த்தி, முகத்தை அசைத்து ஆடும் செங்கீரைப்பருவம்)
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் 11

குறிப்பு: இப்பாசுரத்தை இருமுறை சேவிக்க வேண்டும்!

அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்
ஆமையு மானவனே! ஆயர்கள் நாயகனே*
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை
ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவென்று*
அன்னநடை மடவாள் அசோதை யுகந்தபரிசு
ஆனபுகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்*
இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார் உலகில்
எண்திசையும் புகழ்மிக்கு இன்பமது எய்துவரே.

பதவுரை:


அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும் ஆமையு மானவனே - அன்னப்பறவையாய் அவதரித்து வேதங்களுரைத்தவனே; மீனாய் அவதரித்து மறைகளை மீட்டவனே; நரசிம்மனாய் வந்து நாராயண நாமம் நிலைநிறுத்தினவனே; வாமனனாய் வந்து விண்ணைத்தாண்டி அளந்தவனே; ஆமையாய் வந்து அமரர்களுக்குதவியவனே;

ஆயர்கள் நாயகனே என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவென்று - எங்கள் ஆயர்குலத் தலைவனே, என்பால் இரங்கமாட்டாயா? என் துயரங்களைய மாட்டாயா? ஏழுலகுங் கொண்டவனே இந்த ஏழையின் உள்ளங்குளிர, கண்கள் களிக்க நீ செங்கீரை ஆடமாட்டாயா?

அன்னநடை மடவாள் அசோதை யுகந்தபரிசு ஆனபுகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த - அன்னமென மெல்ல நடை புரியும் யசோதை அன்னையான, புதுவை நகர் வாழ் இந்த பட்டனின் பரிசான

தமிழ் இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார் உலகில் எண்திசையும் புகழ்மிக்கு இன்பமது எய்துவரே - இந்த பத்து, இன்றமிழ் இன்னிசை பாக்களைப் பாட மனமுள்ளவர்கள், பாடவல்லவர்கள் உலகின் எட்டுத்திக்கும் புகழ் பெற்று, எல்லையில்லா இன்பம் பெறுவரே.

பொழிப்புரை:

அன்னம், மீன், நரசிம்மன், வாமனனுடன் ஆமை வடிவிலும் அவதரித்தவனே! ஆயர்குல நாயகனே! என் துயரங்களைய மாட்டாயோ? ஏழுலகுங்கொண்டவனே என்னிடத்தே ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவென்று, அன்னம் போல் மெல்ல நடைபுரியும் யசோதை அன்னையின் உள்ளங்கொண்டு, பாடிய புதுவை நகர் வாழ் பட்டன் அளித்த பரிசான இந்த இன்றமிழ் இசை மாலைகளைப் பாட வல்லவர், உலகெங்கும், எட்டுத் திக்கும் புகழ் பெற்று, பேரின்பம் பெறுவரே!

21 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்//
அன்ன அவதாரமா? அது என்ன சொல்லுங்க? :)

//அன்னநடை மடவாள் அசோதை யுகந்தபரிசுஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்*//

அசோதை உகந்த பரிசு என்ன?
கண்ணனா?
புதுவைப் பட்டர் பெரியாழ்வாரா?
அவர் உரைத்த தமிழா?
எதைப் பரிசு-ன்னு குறிப்பிடறார்? கொஞ்சம் விளக்குங்கள்!

நாடி நாடி நரசிங்கா! said...

தமிழ் இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார் உலகில் எண்திசையும் புகழ்மிக்கு இன்பமது எய்துவரே::)))

Execuse me! Mr. Periya Aazhvaar
one smaal doubt

நன்று
ஒவ்வொரு ஆழ்வார்களும் பாசுரம் முடிந்தவுடன் இதை படித்தால் இந்த பயன் என்று சொல்றாங்க!
என்னை பக்கத்து வீட்ல இருக்கறவங்களுக்கே தெரியாது, எட்டு திக்கும் புகழ் இதெல்லாம் நடக்கிற காரியமா!

மேலும் ஒரு சில பாசுரங்களில் கடைசியில் நீங்கள் தேவர்கள் ஆவீர்கள் . வெண் குடை கீழ் உலகத்தையே ஆட்சி செய்வீர்கள் என்று சொல்வாங்க!

இதெல்லாம் எதற்கு சொல்றாங்க! இதெல்லாம் நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமா!

பாசுரத்தை மட்டும் சொல்லி இருக்கலாமே!

In Love With Krishna said...

@அக்காரக்கனி In Honey :
Excuse me! One small doubt:
Neenga pasuram solvadhu edharkku?

//அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்
ஆமையு மானவனே! ஆயர்கள் நாயகனே*
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை
ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவென்று*//

Ippadi evalavo velai ulla kannan for periyazhwar's sake, "செங்கீரை" aduvadhai rasikkava?


(or)

"எண்திசையும் புகழ்மிக்கு இன்பமது எய்துவரே"
Andha perumai anubavikkava?

Neenga kannan-ai rasikka ninaicheengana, peyar, pughal ellam jujubi.
U r entitled to the highest level of happiness!!
So, why do you need this?!

But if you want fame, you will get that also.

Periyazhwar vilundhu vilundhu padichhu "marketing degree" vaangala.
Aanal, avarai pol marketing- no chance!! :))

Main product (Perumal's greatness) pudichirukka- very good!!
Main product arumai, theriyalaya? Paravaillai? Some incentive is FREE!!!
Now, you got your (free promotional incentive + main product).
Now, maybe you would know, the incentive is nothing without the main product!! :))

Actually, i used to think the assured "gifts" for paasurams were misleading.
Oru nalla manidhar enakku adhu oru "encouragement" only, it's not the MAIN DEAL-nnu puriya vachaaru. :))

நாடி நாடி நரசிங்கா! said...

In Love With Krishna said...
@அக்காரக்கனி In Honey :
Excuse me! One small doubt:
Neenga pasuram solvadhu edharkku?:)


பாசுரத்தை மட்டும் சொல்லி இருக்கலாமே!:)
This is my last line in my comments
u not seen i think:)

Oru nalla manidhar enakku adhu oru "encouragement" only, it's not the MAIN DEAL-nnu puriya vachaaru. :))

Yaa! thats true only: i think

நாடி நாடி நரசிங்கா! said...

Periyazhwar vilundhu vilundhu padichhu "marketing degree" vaangala.
Aanal, avarai pol marketing- no chance!! ::))

O! Krishna what a touching line:))))))))))))))))))))))))))

நாடி நாடி நரசிங்கா! said...

ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்குழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே 4.2

ஆழ்வார்கள் பெருமாளை மட்டுமே கேட்டார்கள். மற்றவை எதிர்பார்க்கவில்லை

கண்டிப்பாக பாசுரம் படிப்பவர்களும் அந்த பலனை எதிர்பார்த்து யாரும் படிப்பதில்லை!
அப்படி இருக்கும் போது எதற்க்காக பாசுரத்தில் முடிவில் பயன்களை போட்டார்கள் .
This is my question .
Encouragement –kkaagavaa?
Or any special reason

நாடி நாடி நரசிங்கா! said...

ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்குழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே 4.2

ஆழ்வார்கள் பெருமாளை மட்டுமே கேட்டார்கள். மற்றவை எதிர்பார்க்கவில்லை

கண்டிப்பாக பாசுரம் படிப்பவர்களும் அந்த பலனை எதிர்பார்த்து யாரும் படிப்பதில்லை!
அப்படி இருக்கும் போது எதற்க்காக பாசுரத்தில் முடிவில் பயன்களை போட்டார்கள் .
This is my question .
Encouragement –kkaagavaa?
Or any special reason

In Love With Krishna said...

@அக்காரக்கனி In Honey:

ok, one person is writing a "love letter"
it is meant for "one person" only.

There is one group which will try to find out what he wrote.
There is one group which will go further, and actually admire what he wrote.
There is another group which may try to express their love through this person's beautiful words.

But, ivangalai ellam thavira, innum oru group irukaanga-adha padicchu namakku enna aaga pohudhu?!

Azhwargal ezhudhiya love letter for Perumal! " :)
Aanal, andha madhiri oru paasuram padikkum podhu dhaan namakkum avarukku anbudan sevai seyyanum endra aasai varum.

According to Azhwars, avanga mattum Perumal-ai paadina podhadhu...
Avangaludaya bhakthi-yaal impress aanavanga mattum paadina podhadhu...
Ellorum paadanum...
Adharkku dhaan andha 'encouragement'!

Aandal paadiya "ongi ulagalandha.." paadal paadina "selvam niraindhelor empaavay"...Bcoz of that, ppl give importance to that pasuram...
But She sings- "Neengaadha selvam niraindhelorempaavay"
Neengaadha selvam= Perumal arul, adiyaar kulam, etc.

When a person sings paasuram for Perumal, great!! :))
But, if He is going to sing it for these "material benefits", He becomes like the sinner who was saved from hell by Perumal because, at the time of death, he called out to his son- "Narayana"!...
or, Valmiki- "maRAMaram" solli "ramayanam" ezhudhinaar!

This is my interpretation.
Actually, "vaaranam aayiram" pattu padichappo enakku kadaisiyil varum "vaayum nanmakkal pettru magilvare" line paadinappo thonichu- "Hey Perumal-e! Hey Aandal-e! For this only, i said all these paasurams? Even u don't understand me?"

Then only i got it..Aandal pattu ezhidanadhu Perumal-kku.

Margazhi maadham thirupaavai padinappo veedu veeda poi, vaaykku vandha padi thitti ellam paarthu, oru vazhiyaa ella girls-aiyum avan veetukku kootittuponaanga namma Aandal! :))

So, technically, She wanted EVERYONE to get the bliss of Perumal, even if they were not willing!

So, like i already once said, if you know the MAIN DEAL, you know the side offer is just an eye wash.
Speak of marketing techniques again!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அடியார்கள் இடையே மிகவும் சுவையான உரையாடல்! நான் மிகவும் மகிழ்ந்தேன்! :)

//Actually, "vaaranam aayiram" pattu padichappo enakku kadaisiyil varum "vaayum nanmakkal pettru magilvare" line paadinappo thonichu- "Hey Perumal-e! Hey Aandal-e! For this only, i said all these paasurams? Even u don't understand me?"
Then only i got it..Aandal pattu ezhidanadhu Perumal-kku.//

இன்னும் நாம் பேசிய அந்த உரையாடல் எல்லாம் ஞாபகம் வச்சிக்கிட்டு இருக்கீங்களா கிருஷ்ணா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மேலும் ஒரு சில பாசுரங்களில் கடைசியில் நீங்கள் தேவர்கள் ஆவீர்கள் . வெண் குடை கீழ் உலகத்தையே ஆட்சி செய்வீர்கள் என்று சொல்வாங்க!

இதெல்லாம் எதற்கு சொல்றாங்க! இதெல்லாம் நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமா!

பாசுரத்தை மட்டும் சொல்லி இருக்கலாமே!

கண்டிப்பாக பாசுரம் படிப்பவர்களும் அந்த பலனை எதிர்பார்த்து யாரும் படிப்பதில்லை!
அப்படி இருக்கும் போது எதற்க்காக பாசுரத்தில் முடிவில் பயன்களை போட்டார்கள் .
This is my question//

ராஜேஷ்...

கள்வனின் காதலி (In love with Krishna) சொன்னதற்குச் சற்று மேலதிகமாக..அடியேன் கொஞ்சம் பேசலாம் அல்லவா? :)

பாசுரத்தில் பலன்கள் எதுக்குச் சொல்லணும்?
ஒன்றை எதிர்பார்த்து காரியம் பண்ணுறாப் போலன்னா ஆகிடும்? உங்கள் கேள்வி மிகச் சரியே!

இப்போ, சான்றாக,
1. "வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே"-ன்னு ஆண்டாள் பாசுரம் முடியும்!
2. "நல்ல பதத்தால் மனை வாழ்வர், கொண்ட பெண்டிர், மக்களே"-ன்னு நம்மாழ்வார் முடிப்பார்!

இந்தப் பாசுரங்களைத் துறவிகளான ஜீயர்கள் கூடச் சொல்லுவாங்க!
அப்படீன்னா அவங்களுக்கு எல்லாம் நல்ல குழந்தைகள் பிறக்கும்-ன்னு அர்த்தமா? இல்லை நல்ல பெண்டிர்கள் வாய்ப்பாங்க-ன்னு அர்த்தமா? :)))

எல்லாருக்கும் பொதுவா சொல்ல வேண்டிய ஒன்றில், இப்படிப் பலன்களைச் சொல்லி, நீர்த்துப் போகச் செய்யலாமா? எதுக்கு ஆழ்வார்கள் இப்படி எல்லாம் டகால்ட்டி பண்ணனும்? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இப்போ இன்னொரு காட்சி காட்டுறேன்!

பெருமாளை அழகா அலங்காரம் செய்து கொண்டு வராங்க! ஒரு கையில் கோவர்த்தன மலை தாங்கி காக்கும் கோலம்...இன்னொரு கையை எக்கி நீட்டறாரு, யானையை முதலையின் வாயில் இருந்து காப்பாற்ற எக்கறாரு...கைகளில் மின்னும் சங்கு சக்கரம்! திருவடியில் தாமரையின் சிரிப்பு! திருமுகத்திலும் செஞ் சிரிப்பு!

இதைத் தங்கள் தோள்களிலே தூக்கிக் கொண்டு ஆடி ஆடி அசைந்து வருகிறார்கள் = திருப்பாதம் தாங்கிகள்! மற்ற அடியார்கள் போல் இவர்களால் அந்த அழகைச் சேவிக்க முடியாதே! தொம் தொம் என்று உலா வருவதைப் பார்த்து அனுபவிக்க முடியாதே! இவர்கள் எப்படி ஆனந்திப்பார்கள்?

அவனைக் கண்டு நம் முகங்களில் பூக்கும் சிரிப்பும் சந்தோஷமும் தான் இவர்களுக்கு இறைவன் திருக்கோலச் சிரிப்பும் சந்தோஷமும்! இந்தத் திருப்பாதம் தாங்கிகளைப் போலத் தான் ஆழ்வார்களும், அவர்கள் பாடிய பாசுர பலன்களும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இறைவனை உலா வரச் செய்யும் போது, பத்து அடிக்கு ஒரு முறை நிப்பாட்டுவதில்லையா? எதற்கு?

அவன் உலா மட்டுமே வந்தால் போதாது! பக்தர்களின் அன்பையும், அவர்கள் தட்டில் உள்ள கர்ப்பூர தீபத்தையும், அவன் கிட்டக்க சென்று ஏற்றுக் கொள்ள வேணும்!

பத்து அடிக்கு ஒரு முறை நிப்பாட்டுவது போல் தான், ஆழ்வார்களும் பத்து பாசுரங்களுக்கு ஒரு முறை நிப்பாட்டுகிறார்கள்! :)

நம் தட்டில் நமக்கு வசதிப்பட்டாற் போல என்னென்னவோ வைத்துள்ளோம்! இருந்தாலும், அதையும் ஒரு கள்ளச் சிரிப்புடன் ஏற்றுக் கொள்ளுமாப் போலே...

பத்து பாசுரங்களில் கம்பீரமாக இறைவனை மன-உலா வரச் செய்யும் ஆழ்வார்கள்...
பத்து அடிக்கு ஒரு முறை நமக்காக நிப்பாட்டுகிறார்கள்! :)

புரிந்ததா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

You have something called the Rolling Shield in School, for the best student!

We learn for our sake, learning sake, future sake! Then why all this shield? Is it not materialistic? Will it not create competition between students? If one student wins that shield, does it mean, all others are not good students??? :))

அதே லாஜிக் தாங்க இங்கும்!
அருமையான இறைத் தமிழ்க் கவிதை - பத்து பாடல்கள்! அதை முடிக்கும் போது இந்த சுழற் கோப்பை!

இது எதற்கு? இது தேவையா? இது "சுயநலம்" ஆகாதா? = ஆகாது!

ஆனா, தோழி கோதை அப்படி அல்ல! அவளுக்கு அவள் மட்டும் கண்ணனை அடைந்தால் போதாது! அத்தனை பேரும் கண்ணன் கழலினை அடைய வேணும்! அதுக்குத் தான் இந்தச் சுழற் கோப்பையை வைக்கிறாள்!

சுழற்கோப்பை என்பது ஒரு பொது அடையாளம் மட்டுமே! அது ஒருவரிடம் மட்டும் தங்கி விடுவதில்லை! சுழன்று கொண்டே இருக்கும்!
ஆர்வம் இல்லாத மாணவர்கள் கூட, குறைந்த பட்சமாவது ஈர்க்கப்படுவார்கள்! தன் நண்பனுக்காகவேனும் அணி திரள்வார்கள்! அதற்கான ஊக்கம் தான் கோதையின் அந்த நூற்பயன்/பல சுருதி!

* திருப்பாவையில் = எங்கும் திருவருள் பெற்று இன்பு உறுவர் எம்பாவாய்-ன்னு பொதுப் பலனாகத் தான் முடித்தாள்!
* ஆனால் இது கல்யாணக் கனவு! = அதனால் சிறப்புப் பலனாக வைத்து முடிக்கின்றாள்! வாயும் நன் மக்களைப் பெற்று - மகிழ்வரே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வாயும் நன் மக்களைப் பெற்று - மகிழ்வரே//

இங்கே நன்+மக்கள் = குழந்தைச் செல்வம் என்பது கல்யாணக் கனவுக்கான சிறப்புப் பலன்! மகிழ்வரே என்பது பொதுப் பலன்!

ஆனால் அது மட்டுமே பொருளல்ல! அப்படிப் பார்த்தா, இந்தப் பாட்டைத் துறவிகள், ஜீயர்கள் கூட ஓதுகிறார்கள்! அவிங்களுக்கு என்ன சொல்வது? :)

The Focus is not on "நன்மக்கள்", but on "வாயும்-மகிழ்வரே"!
நன்மக்கள் என்பது ஒரு Rolling Shield மட்டுமே! :)

நன் மக்கள் = குழந்தைச் செல்வம்,
நன் மக்கள் = நல்ல நட்பு, நல்ல இனம், அடியார் குழாம்
என்று பலவும் குறிக்கும், அவரவர்கள் ஏந்தி வரும் தட்டு போல!

பத்து பாசுரங்களுக்கு ஒரு முறை பெருமாள் நிற்கிறார்!
அவரவர் தட்டில் அவரவர் தீபம் காட்டிக் கொள்கிறார்கள்!
அதுவே ஆழ்வார்களின் பாசுரப் பலன் சொல்லும் நோக்கம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தமிழ் இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார் உலகில் எண்திசையும் புகழ்மிக்கு இன்பமது எய்துவரே//

//என்னை பக்கத்து வீட்ல இருக்கறவங்களுக்கே தெரியாது, எட்டு திக்கும் புகழ் இதெல்லாம் நடக்கிற காரியமா!//

அதே போல் இங்கும்...சினிமாப் புகழ் எய்துவார்கள், அரசியல் புகழ் எய்துவார்கள் என்பது பலன் அன்று!

உலகில் எண் திசையும் புகழ்மிக்கு இன்பமது எய்துவரே = எண் திசையும் நம்ம பேர் பரவினால் மனசுக்கு எவ்ளோ இன்பமோ, அது போல ஒரு இன்பம், இன்பம் அது எய்துவரே-ன்னு படிக்கணும்! Focus is not on புகழ், but on இன்பம்!

அதே போல், அரசாள்வர், சொர்க்க இன்பம் அடைவர் என்று ஒவ்வொரு பலனும்...
பொதுப் பலனும் உண்டு, சிறப்புப் பலனும் உண்டு! அவரவர் தட்டில் அவரவர் தீபம் காட்டிக் கொள்கிறோம்! அவ்வளவே! தீபம் காட்டிய பின்னும் உலா தொடரும்! அப்போது மனங்கள் அவன் பின் தொடர்ந்து, அவனையே அடையும்!

//Execuse me! Mr. Periya Aazhvaar
one smaal doubt//

ஆழ்வார் நியமித்த வண்ணம் சொல்லி முடித்தேன்!
ஐயம் களைந்து இன்புறுவர் எம்பாவாய்!

In Love With Krishna said...

@அக்காரக்கனி In Honey:
//ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்குழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே//
Beautiful Paasuram. :))

Adhe pathu paadal-la innum irendu paasuram romba pidikkum (English-la full-a type panradhum kashtam, so will quote only my fav lines)

"Ponvattil pidithu pugalpereven aavene!"

and
"Padiyaay kidanthu un pavazha vaay kaanbene!"

In Love With Krishna said...

@kRS:
//இன்னும் நாம் பேசிய அந்த உரையாடல் எல்லாம் ஞாபகம் வச்சிக்கிட்டு இருக்கீங்களா கிருஷ்ணா?//
:))
Pesiyadhu romba naal ennakku irundha "doubt" pattri.. so no!

//கள்வனின் காதலி (In love with Krishna) // :)))))))))



//அவனைக் கண்டு நம் முகங்களில் பூக்கும் சிரிப்பும் சந்தோஷமும் தான் இவர்களுக்கு இறைவன் திருக்கோலச் சிரிப்பும் சந்தோஷமும்! இந்தத் திருப்பாதம் தாங்கிகளைப் போலத் தான் ஆழ்வார்களும், அவர்கள் பாடிய பாசுர பலன்களும்!//
:))
Beautiful example! :)

In Love With Krishna said...

தமிழ்: Azhagana post!
Explanations ellam arumai!

Neenga innum niraiya ezhudhanum, kannan eppodhum unga blog-laiyum unga life-laiyum sengeerai aadanum-nnu vendikkiren avanidame! :)

நாடி நாடி நரசிங்கா! said...

ஒன்பது பாசுரங்களில் பெருமாளை பாடிய ஆழ்வார்கள் நிறுத்தம் வரும்போது நம்மை பார்க்கிறார்கள். :)))

அவரவர் விருப்பபடி காட்டும் தீபாராதனை!

:::)))))))))))))))))

நாடி நாடி நரசிங்கா! said...

English-la full-a type panradhum kashtam,:))

http://www.google.com/transliterate/tamil

IF u comfortable use this .

நாடி நாடி நரசிங்கா! said...

கரும்பே, தேனே , அமுதே , நித்தில தொத்தே என்று உயர்த்த பொருளை சொல்லி பெருமாளை அனுபவிக்கும் நம்மையும் அனுபவிக்க வைக்கும் ஆழ்வார்கள்,

நிறுத்தம் வரும்போது உயர்ந்த பொருளான தெரியும் எங்கும் புகழ், விண்ணரசு ஆள்வீர்கள் , என்றெல்லாம் சொல்கிறார்கள் .


அதுவும் சரி இதுவும் சரி அனைத்தை விடவும் எம்பெருமானே உயர்ந்தவர்
சொல்லாமல் சொல்கிரார்ர்கள்
Periyaazhvaar திருவடிகளே சரணம்