Sunday, September 6, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 12

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்


பாடல் 12


மைத்தடங்கண்ணி யசோதை வளர்க்கின்ற*
செய்த்தலை நீலநிறத்துச் சிறுப்பிள்ளை*
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய*
கைத்தலங்கள் வந்துகாணீரே கனங்குழையீர்! வந்துகாணீரே.

பொருள்:

மைத்தடங்கண்ணி யசோதை வளர்க்கின்ற -
கருமையான, பெரிய கண்களை கொண்டவளான யசோதை அன்னை வளர்க்கின்ற (மை - கருமை; தட - பெரிய; கண்ணி - கண்களையுடையவள்)









செய்த்தலை நீலநிறத்துச் சிறுபிள்ளை -
நீர்நிறைந்த வயல்வெளிகளில் வளரக்கூடிய நீலம் என்னும் கருங்குவளை மலரையொத்த நிறமுடைய சிறுபிள்ளை (செய் - வயல்; நீலநிறம் - நீலம் என்னும் மலரினை ஒத்த நிறம்)

நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய -
நேமியும் சங்கும் நிலாவிய நெய்த்தலை கைத்தலங்கள் - திருச்சக்கரமும், திருசங்கும் நிலைத்திருந்த, செழுமையான (நெய்த்தல் - செழித்தல்; நேமி - சக்கரம், வட்டம்; நிலாவிய - நிலைத்திருக்கின்ற)

கைத்தலங்கள் வந்துகாணீரே கனங்குழையீர்! வந்து காணீரே - எப்பொழுதும், திருசங்கும், சக்கரமும் நிலைத்திருக்கின்ற செழுமையான கைத்தலங்களை வந்து பாருங்கள். காதில், கனமான பொன்னால் செய்யப்பட்ட குண்டலங்களை அணிந்துள்ளவர்களே வந்து பாருங்கள். (கனம் - பொன், பாரம்; குழை - காதணி, குண்டலம்)

பதவுரை:

கருமையான, பெரிய கண்களையுடைய யசோதை அன்னை வளர்க்கின்ற, நீர்நிறைந்த நிலத்தில் மலரக்கூடிய கருங்குவளை மலரையொத்த வண்ணமுடைய இந்த பிள்ளையின், செழுமையான, திருசக்கரமும்திருசங்கும் நிலைத்திருந்த அழகிய கைத்தலங்களை வந்து பாருங்கள். காதில், பொன்னால் செய்யப்பட்ட கனமான குண்டலங்களை அணிந்துள்ளவர்களே வந்து பாருங்கள்.

13 comments:

Anonymous said...

பாடல் 9 – il பெருங்கடலின் நீலவண்ண தேகம் கொண்ட கண்ணனை enru paadum periyalwar

பாடல் 12 – il நீர்நிறைந்த வயல்வெளிகளில் வளரக்கூடிய நீலம் என்னும் கருங்குவளை மலரையொத்த நிறமுடைய சிறுபிள்ளை enru paadugiraar

Sri krishnar indha neela nirattil pirandaaraa? Alladu Periyalwar paasuram azhagirkaaga neela nirangalai opidugiraara?

தமிழ் said...

srikamalakkanniamman said...

பாடல் 9 – il பெருங்கடலின் நீலவண்ண தேகம் கொண்ட கண்ணனை enru paadum periyalwar

பாடல் 12 – il நீர்நிறைந்த வயல்வெளிகளில் வளரக்கூடிய நீலம் என்னும் கருங்குவளை மலரையொத்த நிறமுடைய சிறுபிள்ளை enru paadugiraar

Sri krishnar indha neela nirattil pirandaaraa? Alladu Periyalwar paasuram azhagirkaaga neela nirangalai opidugiraara?//

ஆமாம், கண்ணனின் அவதார நிறமே கருநீலம் தான்... அஞ்சனவண்ணன், நீலமணிவண்ணன்... என்றெல்லாம் பாடுவது, கற்பனையாகவோ, பாசுரத்தின் அழகைக் கூட்டவோ அல்ல.

முகவை மைந்தன் said...

//ஆமாம், கண்ணனின் அவதார நிறமே கருநீலம் தான்//

இல்லைன்னு நினைக்கிறேன். திருமாலின் நிறம் கருப்புத்தான். உயர்வு நவிற்சியாக நீல வண்ணக் கண்ணன்னு சொல்லிருவோம். ஊர்ல கருப்பா இருக்கவனை கருப்புன்னு சொல்ல மாட்டாங்க. புதுநிறம்னு கொஞ்சம் உயர்த்திச் சொல்வாங்க. நான் புது நிறமாக்கும் :-) வெயில்ல அலைஞ்சு திரிஞ்சு கன்னங்கறேல்னு வந்தாக் கூட 'ஏண்டா இப்படி கறுத்துப் போயிருக்க'ன்னு தானே சொல்வாங்க.

கருத்த வடிவால் கருத்தை இழுப்பான்
திருத்த வடியே திரு.

தமிழ் said...

முகவை மைந்தன் said...

//ஆமாம், கண்ணனின் அவதார நிறமே கருநீலம் தான்//

இல்லைன்னு நினைக்கிறேன். திருமாலின் நிறம் கருப்புத்தான். உயர்வு நவிற்சியாக நீல வண்ணக் கண்ணன்னு சொல்லிருவோம். ஊர்ல கருப்பா இருக்கவனை கருப்புன்னு சொல்ல மாட்டாங்க. புதுநிறம்னு கொஞ்சம் உயர்த்திச் சொல்வாங்க. நான் புது நிறமாக்கும் :-) வெயில்ல அலைஞ்சு திரிஞ்சு கன்னங்கறேல்னு வந்தாக் கூட 'ஏண்டா இப்படி கறுத்துப் போயிருக்க'ன்னு தானே சொல்வாங்க.

கருத்த வடிவால் கருத்தை இழுப்பான்
திருத்த வடியே திரு.//

அதுக்குத்தான் திருமால அஞ்சன(மை)வண்ணன், முகில்வண்ணன் னுல்லாம சொல்றாங்க...

ஆனா கண்ணனை மட்டும் பெரும்பாலும் நீலம் ன்ற வண்ணத்துல தானே சொல்றாங்க...

பாட்டுலத்தான் அழகுக்காக சொல்றாங்க ன்னு வெச்சுகிட்டாலும்.... எல்லா கண்ணபெருமான் படங்களும் நீல நிறத்துல தானே வரையறாங்க....

அவதாரம் ங்கறதால, இந்த வண்ணத்துக்குக் கூட ஏதாவது காரணம் இருக்கும் போல...

கரியவன் திருமால், நீலமணியவன் கண்ணன் ன்னு நெனச்சேன்...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய* கைத்தலங்கள்//

குழந்தையின் கையில் சங்கு சக்கரம் இருக்குமா? அதான் "நிலாவிய" கைத்தலம் என்று பாடுகிறார்! முன்பு நிலவியதாம்! :)
அவதார காலங்களில் இறைவன் கைகளில் சங்கு சக்கர அம்சமாக மச்சங்கள் இருக்கும்! அல்லது ரேகைகள் இருக்கும்! கண்ணக் குழந்தையின் கரங்களில் சங்கு சக்கர ரேகை பொலிந்ததாக பாகவதம் முதலான புராணங்கள் சொல்லும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//முகவை மைந்தன் said...
//ஆமாம், கண்ணனின் அவதார நிறமே கருநீலம் தான்//

இல்லைன்னு நினைக்கிறேன். திருமாலின் நிறம் கருப்புத்தான். உயர்வு நவிற்சியாக நீல வண்ணக் கண்ணன்னு சொல்லிருவோம்//

ஹிஹி!
முகவை மைந்தன் சொல்வது பாதி சரி!
முகில் சொல்வ்பது பாதி சரி!

இதற்குப் பதில் சொல்லணும்-ன்னா, பச்சை மா மலை போல் மேனியையும் பார்க்கணும்! திருமாலின் நிறம் கருமையா? நீலமா? பச்சையா?
மொதல்ல அதைச் சொல்லுங்க! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திருமாலின் நிறம் கருமையா? நீலமா? பச்சையா?
மொதல்ல அதைச் சொல்லுங்க!//

இதுக்கு Clue, "நாரணம்" என்ற தமிழ்ச் சொல்லில் இருக்கு! :)
ஓம் நமோ Dash தொடரைப் படிச்சவங்க இதுக்கு ஈசியா பதில் சொல்லீறலாம்! So, முகில் சொல்லீருவாங்க! :)

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய* கைத்தலங்கள்//

குழந்தையின் கையில் சங்கு சக்கரம் இருக்குமா? //

குழந்தை கண்ணன் பிறந்தவுடன், தன் திருவுருவத் தோற்றத்தைத் தன் பெற்றோர்களான தேவகி வசுதேவருக்குக் குழந்தை உருவில் காட்டியருளினார்.

அதான் "நிலாவிய" கைத்தலம் என்று பாடுகிறார்! முன்பு நிலவியதாம்! :)
அவதார காலங்களில் இறைவன் கைகளில் சங்கு சக்கர அம்சமாக மச்சங்கள் இருக்கும்! அல்லது ரேகைகள் இருக்கும்! கண்ணக் குழந்தையின் கரங்களில் சங்கு சக்கர ரேகை பொலிந்ததாக பாகவதம் முதலான புராணங்கள் சொல்லும்!//

விளக்கங்களுக்கு நன்றி இரவி!! ;-))

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//முகவை மைந்தன் said...
//ஆமாம், கண்ணனின் அவதார நிறமே கருநீலம் தான்//

இல்லைன்னு நினைக்கிறேன். திருமாலின் நிறம் கருப்புத்தான். உயர்வு நவிற்சியாக நீல வண்ணக் கண்ணன்னு சொல்லிருவோம்//

ஹிஹி!
முகவை மைந்தன் சொல்வது பாதி சரி!
முகில் சொல்வ்பது பாதி சரி!

இதற்குப் பதில் சொல்லணும்-ன்னா, பச்சை மா மலை போல் மேனியையும் பார்க்கணும்! திருமாலின் நிறம் கருமையா? நீலமா? பச்சையா?
மொதல்ல அதைச் சொல்லுங்க! :))//

திருமாலின் நிறம் கருமை!!

கண்ணபெருமானின் அவதார நிறம் நீலம்!!

சரியா??!!

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//திருமாலின் நிறம் கருமையா? நீலமா? பச்சையா?
மொதல்ல அதைச் சொல்லுங்க!//

இதுக்கு Clue, "நாரணம்" என்ற தமிழ்ச் சொல்லில் இருக்கு! :)
ஓம் நமோ Dash தொடரைப் படிச்சவங்க இதுக்கு ஈசியா பதில் சொல்லீறலாம்! So, முகில் சொல்லீருவாங்க! :)//

ஹி ஹி ஹி...

நன்றி இரவி அண்ணா, போட்டுக்குடுக்கறதுக்கு... ;-))

பந்தல் ன்னா தொடர்ந்து படரணும்!! இப்படி தொபுக்கடீன்னு நின்னுடப்படாது...

அப்பறம் நெறய பேருக்கு குளுரு உட்டுறும்...

சரி, விசயத்துக்கு வருவோம்...

நாரம் - நாளம் - நாள் - இரவு - கருமை!!

இதுதான் அந்த குளூ.... ;-))

அண்ணா! நான் பாஸ் ஆயிட்டனா??!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திருமாலின் நிறம் கருமை!!
கண்ணபெருமானின் அவதார நிறம் நீலம்!!
சரியா??!!//

:))

//நாரம் - நாளம் - நாள் - இரவு - கருமை!!
இதுதான் அந்த குளூ.... ;-))//

ஹிஹி! க்ளூவை நான் கொடுத்தா விடையை நீங்க சொல்லணும், பதிலுக்கு க்ளூ கொடுத்தா எப்படி? :))

//அண்ணா! நான் பாஸ் ஆயிட்டனா??!!//

நீ தானேம்மா எப்பவும் Boss? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இதுக்கு Clue, "நாரணம்" என்ற தமிழ்ச் சொல்லில் இருக்கு! :)//

நாரம் = நீர்
அணம் = அருகாமை

நீருக்கு வண்ணம் என்று தனியாக இல்லை என்றாலும்...
பெரும்பாலும் நீர் மிகுந்த இடங்களில், நீர் மூன்று வண்ணங்களில் இருக்கும்!

* கடல் = கருநீலம்
* குளம் போன்ற தேக்கங்களில் = பச்சை
* மேகம் போன்ற பிற இடங்களில் = கருமை

அதனால் நீர் வண்ணனாகிய நாரணனுக்கு நீரின் மூன்று வண்ணங்களுமே சொல்லப்படுவதுண்டு! அவரவர் கண்டு கொண்ட விருப்பப்படி, அந்தந்த நிறம் சொல்லுவது வாடிக்கை!

கருமை! நீலம்! பச்சை - மூன்றுமே சரியே!
எதுவும் ஒன்றுக்கொன்று உயர்வு நவிற்சி இல்லை! :)

தமிழ் said...

@இரவிசங்கர், கண்ணபிரான்...

//நாரம் - நாளம் - நாள் - இரவு - கருமை!!
இதுதான் அந்த குளூ.... ;-))//

ஹிஹி! க்ளூவை நான் கொடுத்தா விடையை நீங்க சொல்லணும், பதிலுக்கு க்ளூ கொடுத்தா எப்படி? :))//

நானும் பதில் தானே சொன்னேன்...

திருமாலின் நிறம் கருமை, கண்ணபிரானின் நிறம் நீலம் அப்படின்னு...

//அண்ணா! நான் பாஸ் ஆயிட்டனா??!!//

நீ தானேம்மா எப்பவும் Boss? :))

ஸ்ஸ்ஸ் அப்பா, முடியல... ;-)) நான் தேர்ச்சிப் பெற்றுட்டேனா ன்னு கேட்டா...

போதும் நிறுத்திக்குவோம்.... அடுத்து முகவை மைந்தன் பதிவு போட ஆரம்பிச்சாச்சே அங்க வந்து கும்முங்க... ;-))

மீ த எஸ் -கபே... (டோரி)