Friday, September 4, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 8

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 8

வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து*
தந்தக்களிறுபோல் தானே விளையாடும்*
நந்தன் மதலைக்கு நன்றுமழகிய*
உந்திஇருந்தவா காணீரே ஒளியிழையீர்! வந்துகாணீரே.

பொருள்:

வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து - கண்ணனுடன் விளையாட வந்திருந்த மற்ற ஆயர்கள் வீட்டுக் குழந்தைகளை எல்லாம் ஏதாவது லொள்ளு செய்து அழவைத்து விட்டு; (மதலை - மழலை; குழாம் - குழு, கூட்டம்; வலி - துன்பம்)

தந்தக் களிறு போல் தானே விளையாடும் - தந்தம் கொண்ட யானையைப் போல் தானே தனி வீரனாக நின்று வென்று விளையாடுகின்ற;

பொதுவாக, குட்டி யானைக்குத் தந்தம் இருக்காது, இது இயல்பு. தந்தம் இருந்தால் அது செய்ற சேட்டைல, அது உடலையே கிழித்தாலும் கிழித்துவிடும். ஆனால், இந்த கண்ணன் எப்படிப்பட்டவனாய் இருந்தானென்றால், மழலைப் பட்டாளம் முன் அவன் தந்தங்கொண்ட ஒரு குட்டி யானையைப் போல் இருந்தானாம்.

குழந்தை உள்ளம், பாலுள்ளம், தயிருள்ளம், தூய வெண்மையான உள்ளம் ன்னு சொல்வாய்ங்க. ஆனா அவங்களுக்கு இருக்குற possessiveness, பெரியவங்களுக்குக் கூட இருக்காது; இருக்க வேண்டிய சமயங்கள் ல்ல. ;-))

தன் தாய்மடியில் தன்னைத் தவிர ஆரும் உட்கரப் படாது; தன் தாய் தன்னைத் தவிர யாரும் தூக்கக் கூடாது. தன் வெளாட்டுப் பொருள்களை வைத்துத் தான் மட்டும் தான் வெளாடனும்.... அதுவும் பாருங்க, இந்த பொம்ம நம்ம குழந்தை விளயாடறதாச்சே, இதக் கொடுத்தா அழுவானேன்ன்னு... அது தொடக் கூடத் தொடாது, எங்காவது மூலையிலத் தூக்கிப் போட்டத எடுத்துவெச்சிருந்து கொடுத்தா, அப்பத்தான், அப்படியே பாசம் பொத்துக்கிட்டு வரும் அந்த பொம்மை மேல. உடனே, அப்புறம் என்ன ஒரே கத்தக் களறித்தான் அந்த இடம். ரெண்டும் ஒன்னோட ஒன்னு, அடிதடி வரைக்கும் கூட போயிடும். ;-))

நந்தன் மதலைக்கு நன்று மழகிய - நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய - மற்ற மழலையரிடத்து, தந்தங்கொண்ட யானைப்பிள்ளைப் போல் இருந்தாலும், தன் தந்தையிடத்து மழலைக் குழந்தையாய் குழைகின்ற கண்ணனுக்கு தடித்தும் இல்லாது, குழியாகியும் இல்லாது, சீர்மையுடன் அமைந்துள்ள அழகான (மதலை - மழலை, குழந்தை)

உந்தி இருந்தவா காணீரே ஒளியிழையீர்! வந்து காணீரே - கொப்பூழ் (தொப்புள்) இருந்த அழகினை வந்து பாருங்கள். மின்னுகின்ற அணிகலன்கள் பூண்டிருப்பவர்களே வந்து, இந்த நந்தன் மைந்தனது, குட்டி யானையினது கொப்பூழ் எத்துனை அழகாய் இருக்கின்றதென்பதைப் பாருங்கள்! (உந்தி - கொப்பூழ், தொப்பூள்; இழை - அணிகலன்)

பதவுரை:

தன்னுடன் விளையாட வந்த மற்ற ஆயர்க் குழந்தைகள் மத்தியில், தந்தம் கொண்ட யானைப் பிள்ளையைப் போல், அவர்களுக்கு ஏதாவது துன்பம் செய்துவிட்டு, தான் மட்டும் தனியே வென்று விளையாடும், நந்தகோபருடைய மழலைச் செல்வமான இந்த மைவண்ணக் கண்ணனுக்கு, எத்துனை சீரான அழகிய கொப்பூழ் இருக்கின்றதென்பதை, பொலிவுமிகுந்து ஒளிவீசும் பொன் அணிகலன் அணிந்துள்ள பெண்களே இங்கே வந்து பாருங்கள். அவன் கொப்பூழின் சீர்மையையும், அழகையும் வந்து பாருங்கள்.

8 comments:

Raghav said...

அருமையான விளக்கம் தமிழ்.. விட்டுப் போன பாசுரங்கள் எல்லாம் கடந்த ரெண்டு நாளா படிச்சுகிட்டு இருக்கேன்..

மூன்று வருடங்களில் முடிப்பது என்பது பெரிய சாதனை தான்.. பெரியவாச்சான் பிள்ளை அவர்கள் நாலாயிரம் பாடல்களுக்கும் வியாக்யானம் செய்ய எத்தனை வருடங்கள் எடுத்துக் கொண்டிருப்பரோ !!

தமிழ் said...

Raghav said...

அருமையான விளக்கம் தமிழ்.. விட்டுப் போன பாசுரங்கள் எல்லாம் கடந்த ரெண்டு நாளா படிச்சுகிட்டு இருக்கேன்..

மூன்று வருடங்களில் முடிப்பது என்பது பெரிய சாதனை தான்.. பெரியவாச்சான் பிள்ளை அவர்கள் நாலாயிரம் பாடல்களுக்கும் வியாக்யானம் செய்ய எத்தனை வருடங்கள் எடுத்துக் கொண்டிருப்பரோ !!//

நன்றி இராகவ்! மூன்று வருடம் என்பது ஒரு அளவிற்காகத்தான் இராகவ். ஆனால், முடித்துவிட முடியுமா என்பது கேள்வியாகத்தான் உள்ளது.

காலமும், கடவுளும்தான் துணைநிற்க வேண்டும்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மூன்று ஆண்டுகளில்
நான்கு ஆயிரம்
= ஒரு நாளைக்கு சுமாரா மூனு பதிவு! முடிக்கலாம் தமிழ்முகில்! மனசு வைங்க! ஈசி தான்!

விளக்கங்களை விளக்காது போனாலும் சுவை இருக்காது! வெறும் பதவுரை பொழிப்புரையா போயீரும்!
அதனால் தனி ஒரு ஆளாகச் செய்யாது, கூடிச் செய்தால் குளிர்தல் ஏதுவாகும்! கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

கைங்கர்யத்துக்கு இன்னும் சில ஆர்வலர்களை அழைத்துக் கொள்ளுங்கள்! தாங்கள் முன்னின்று நடத்திச் செல்லுங்கள்! மூன்றே ஆண்டுகளில் வெற்றி உமதே! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//எங்காவது மூலையிலத் தூக்கிப் போட்டத எடுத்துவெச்சிருந்து கொடுத்தா, அப்பத்தான், அப்படியே பாசம் பொத்துக்கிட்டு வரும் அந்த பொம்மை மேல. உடனே, அப்புறம் என்ன ஒரே கத்தக் களறித்தான் அந்த இடம்//

அனுபவம் பேசுது! :)
மாறக் குழந்தை திருவடிகளே இன்பம்! :)
கண்ணக் குழந்தை திருவடிகளே இன்பம்! :)

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மூன்று ஆண்டுகளில்
நான்கு ஆயிரம்
= ஒரு நாளைக்கு சுமாரா மூனு பதிவு! முடிக்கலாம் தமிழ்முகில்! மனசு வைங்க! ஈசி தான்!//

அந்த மாதிரி ஒரு கணக்குப் பண்ணி தான், அன்னிக்கு சொன்னேன்...


ஆனா இந்த மாசம் கொஞ்சம் விசேஷங்கள் நெறஞ்சதா போயிடுத்து வீட்டுல.. என்ன செய்ய கேசரி செய்யவும், பால்கோவா செய்யவுமே நேரம் பத்தமாட்டேங்குது... ;-((

இருந்தாலும் தங்கமணி கொஞ்சூண்ண்ண்டு கெல்ப் பண்ணலாம், சமைக்கிறதுக்குத்தான்... ;-((
----------------------------

விளக்கங்களை விளக்காது போனாலும் சுவை இருக்காது! வெறும் பதவுரை பொழிப்புரையா போயீரும்!//

சரியாச்சொன்னீங்க!! இனிமேல் அதைப்போல் செய்ய முயல்கிறோம்!! நெம்ப நன்னி இரவி! ;-))
---------------------------------
அதனால் தனி ஒரு ஆளாகச் செய்யாது, கூடிச் செய்தால் குளிர்தல் ஏதுவாகும்! கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

கைங்கர்யத்துக்கு இன்னும் சில ஆர்வலர்களை அழைத்துக் கொள்ளுங்கள்! தாங்கள் முன்னின்று நடத்திச் செல்லுங்கள்! மூன்றே ஆண்டுகளில் வெற்றி உமதே! :)//

சரிங்க இரவி!! ;-))

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//எங்காவது மூலையிலத் தூக்கிப் போட்டத எடுத்துவெச்சிருந்து கொடுத்தா, அப்பத்தான், அப்படியே பாசம் பொத்துக்கிட்டு வரும் அந்த பொம்மை மேல. உடனே, அப்புறம் என்ன ஒரே கத்தக் களறித்தான் அந்த இடம்//

அனுபவம் பேசுது! :)
மாறக் குழந்தை திருவடிகளே இன்பம்! :)
கண்ணக் குழந்தை திருவடிகளே இன்பம்! :)//

திருவடிகள் திரும்பி திரும்பி பல அடிகள் குடுக்குது, என்ன செய்ய... இதுக்குத்தான், அப்பவே தங்கமணி சொன்னா, பேம்லி பேக்க குறைங்க ன்னு... அவன் வயித்து மேல கால்பந்து ஆடுறான்...

உதரத்தே பாய்கிறான்னு யசோதை அம்மா சொன்னாங்க...

இங்க அப்பா வயிறும் நூடூல்ஸ் ஆகுதே..... ;-()

குமரன் (Kumaran) said...

எங்க வீட்டுச் சேந்தனும் மாறன் போலத் தான் தந்தக் களிறா திரியறான். நந்தகோபன் குமரன் மாதிரி குமரனின் குமரனா அப்பாக்கிட்ட கொஞ்சம் அடங்கி இருந்தாலும் (கொஞ்சம் அசரும் நேரம் எல்லாம் அந்த அடக்க ஒடுக்கம் எல்லாம் காணாம போயிடும்) மத்த குழந்தைக நடுவுல தந்தக் களிறு தான்.

தமிழ் said...

குமரன் (Kumaran) said...

எங்க வீட்டுச் சேந்தனும் மாறன் போலத் தான் தந்தக் களிறா திரியறான். நந்தகோபன் குமரன் மாதிரி குமரனின் குமரனா அப்பாக்கிட்ட கொஞ்சம் அடங்கி இருந்தாலும் (கொஞ்சம் அசரும் நேரம் எல்லாம் அந்த அடக்க ஒடுக்கம் எல்லாம் காணாம போயிடும்) மத்த குழந்தைக நடுவுல தந்தக் களிறு தான்.//

வாங்க குமரன், உங்க குமரன் பேரு சேந்தனா!! அருமையான பெயர்!!

சேந்தனுக்கு எம் ஆசிகள்!

மாறன், சேந்தன் மட்டுமில்லைங்க... மழலைக் குழாம் அம்புட்டும் அப்படித்தான் இருக்குதுகள்!!

எல்லாம் கருவில இருக்கும் போதே, டெலிபதி மூலமா கட்சி, கொள்கை சூத்திரம் ல்லாம் உருவாக்கி உடன்படிக்கை செய்து கொள்ளும் போலிருக்கு! ;-))