Friday, September 4, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 6

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 6

மத்தக்களிற்று வசுதேவர் தம்முடை*
சித்தம்பிரியாத தேவகிதன் வயிற்றில்*
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்*
முத்தம் இருந்தவாகாணீரே முகிழ்நகையீர்! வந்துகாணீரே.

பொருள்:

மத்தக்களிற்று வசுதேவர் தம்முடை - மதங்கொண்ட ஆண் யானையைப் போன்று வலிமையுடைய வசுதேவருடைய (மத்தக்களிறு - மதங்கொண்ட யானை)

சித்தம்பிரியாத தேவகிதன் வயிற்றில் - மதங்கொண்ட ஆண்யானைப் போன்று வலிமையுடைய வசுதேவருடைய சிந்தனையை விட்டு எப்போதும் நீங்காமல் இருக்கும், அவரது துணைவியாரான தேவகி அன்னையின் திருவயிற்றில் (சித்தம் - சிந்தனை, நினைவு)

அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன் - இதுக்கு எனக்கு என்ன சொல்றது ன்னு சுத்தமா யோசனையே இல்ல... ;-)) (அச்சுதன் - அழிவில்லாதவன், திருமால்)

மாதவிப்பந்தல் இரவி சார் சொன்ன விளக்கங்கள் பின்வருமாறு:-

அத்தத்தின் பத்தாம் நாள்
* அத்தத்தின் முன்னிருந்து பத்தாம் நாள் = திருவோணம்
* அத்தத்தின் பின்னிருந்து பத்தாம் நாள் = ரோகிணி
ஆழ்வார் இரண்டையுமே குறிக்கிறார்! ஏன்-னா கம்சன், ரோகிணியில் பிறந்த குழந்தைகளை எல்லாம் அழிக்கத் துவங்குகிறான்!
அவன் காதுகளுக்கு குழந்தை பிறந்த நட்சத்திரம் போய்ச் சேரக் கூடாது-ன்னு இப்படி வேணும்-ன்னே குழப்படி போல் செய்கிறார்! :)

//அத்தத்தின் பத்தாம் விண்மீன் ன்னுதான சொல்லணும்... பத்தாம் நாள் என்றால்...??//

ஒரே நாளில் இரண்டு நட்சத்திரங்கள் வரவும் வாய்ப்புண்டு! அதான் நாள் என்று சொல்லிக் கம்சனின் ஒற்றர்களை இன்னும் குழப்புகிறார்!
குழந்தைக்குத் தொட்டில் இடும் விழாவில், நட்சத்திரத்தைச் சொல்ல வேணும் என்ற இக்கட்டு வந்ததால், இப்படி ஒரு தாயுள்ளம்! :)

மேலும் திருவோணம் பெருமாளின் நட்சத்திரம்! அதனால் ஆழ்வார் பொய் சொன்னார் என்ற பேச்சும் வராதபடி நின்றது!

அஸ்தம் = தாயாரின் திருநட்சத்திரம் ஆகையாலே, அவளை முன்னிட்டுச் சொல்லி, குழந்தைக்கு மங்களத்தை உண்டாக்கி வைக்கிறார்!

நன்றி: மிக்க நன்றி, கண்ணபிரான் இரவிசங்கர்.

முத்தம் இருந்தவா காணீரே முகிழ்நகையீர்! வந்து காணீரே - ஆண்யானைப் போன்று வலிமையுடைய வசுதேவருடைய சிந்தனையில், என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும் அன்னை தேவகியின் திருவயிற்றில் அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அழிவற்ற இந்த பாலகனின் முத்தம் இருந்த அழகை வந்துபாருங்கள்! முகிழ்கின்ற குறுநகை உடைய நங்கையரே வந்து பாருங்கள். (முத்தம் - ஆண் உறுப்பு; முகிழ் - அரும்பு; நகை - புன்னகை, சிரிப்பு)

பதவுரை:

மதங்கொண்ட ஆண்யானைப் போன்று வலிமையுடைய வாசுதேவருடைய மனத்தில் என்றும் நீங்காது நிறைந்துள்ள அன்னை தேவகிப் பிராட்டியின் திருவயிற்றில், அத்த நட்சத்திரத்திற்குப் பின் பத்தாவது நட்சத்திரமான இரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த அழிவற்றவனான இந்த பாலகனின் முத்தம் இருக்கின்ற அழகை வந்து பாருங்கள். நாணத்துடன் குறுநகைப் புரியும் நங்கையரே, இச்சிறுப்பிள்ளையினை வந்து பாருங்கள்.

11 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நல்ல விளக்கங்கள் தமிழ்!

அச்சுதன் என்றால் அழிவில்லாதவனா? நான் அச்சு அச்சு-ன்னு ரொம்ப தும்முவாரு! அதான் அச்சு அச்சு-ன்னு கூப்புடறாங்களோ-ன்னு நெனைச்சேன்! :)

//மத்தக்களிற்று வசுதேவர் தம்முடை//

இப்படி யானையை வைத்து அவரு பொண்ணும் பாடுவா - உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் :)

//அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்//

இதைக் கொஞ்சம் விளக்குங்களேன்! சரியாப் புரியலை! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//முத்தம் இருந்தவா காணீரே//

ஹிஹி! நோ கமென்ட்ஸ்!
நல்ல வேளை கண்ணன் குழந்தைக்கு டயாப்பர் எல்லாம் கட்டி விடலை! அதனால "தரிசிக்க" முடிஞ்சுது! :)

//முகிழ்நகையீர்! வந்து காணீரே//

குழந்தையின் "முத்தத்தை" பார்த்துட்டு குபு குபு-ன்னு வாண்டுப் பெண்கள் எல்லாம் சிரிக்கிறாங்களாம்! அதான் "முகிழ்" நகையீர்-ன்னு சொல்லிப்பிட்டாரு! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இது ஆழ்வார் யசோதையாப் பாடுற பாட்டு தானே?
யசோதைக்கு கண்ணன் தேவகி-வசுதேவர் மகன்-ன்னு தெரியாதே! அப்பறம் எப்படி...
//சித்தம்பிரியாத தேவகிதன் வயிற்றில்*
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்*//

:))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
This comment has been removed by the author.
Radha said...
This comment has been removed by the author.
Radha said...

//இது ஆழ்வார் யசோதையாப் பாடுற பாட்டு தானே?
யசோதைக்கு கண்ணன் தேவகி-வசுதேவர் மகன்-ன்னு தெரியாதே! அப்பறம் எப்படி...//

thamizh, ungalukku help panradhaaga ninaichikittu ungalukku munnadi vilakkam sollidren. :-) mannichidunga. :-)

indha paasuratthula naaradhar, vasudevar bhaavaththula ellam azhwaar irundhuttu apparuma yasodhai bhaavaththukku varaar. :-)

Radha said...

thamizh sir,
for periya aazhwaar's paasurams, you may find the following link helpful.
http://www.maransdog.org/doc/Periazhwar_ThiruMozhi_PVP_Optimized.zip

Complete list of all 4000 in the following link.
http://www.maransdog.com/document/

pls igonore the message if are you already aware of them.
~
Radha

தமிழ் said...

@Radha...
thamizh, ungalukku help panradhaaga ninaichikittu ungalukku munnadi vilakkam sollidren. :-) mannichidunga. :-)//

மன்னிப்பெல்லாம் இங்க கேக்கவே வேணாம்!! நீங்க தாராளமா சொல்லலாம்... ;-))
நாங்களும் நிறைய தெரிந்து கொள்வதற்குத்தான் இந்த வலைப்பூவே ஆரம்பிச்சோம்...


indha paasuratthula naaradhar, vasudevar bhaavaththula ellam azhwaar irundhuttu apparuma yasodhai bhaavaththukku varaar. :-)//

கொஞ்சம் தெளிவாக சொல்லுங்களேன்... தயவுசெய்து!

தமிழ் said...

Radha said...

thamizh sir,
for periya aazhwaar's paasurams, you may find the following link helpful.
http://www.maransdog.org/doc/Periazhwar_ThiruMozhi_PVP_Optimized.zip

Complete list of all 4000 in the following link.
http://www.maransdog.com/document/

pls igonore the message if are you already aware of them.
~
Radha//

தகவலுக்கு நன்றிங்க இராதா!! பார்க்கிறேன். எங்கள் வலைப்பூவில் இட்டு மற்றவர்களுக்கு உபயோகப் படுமாறு செய்தமைக்கு மிக்க நன்றி இராதா!!

குமரன் (Kumaran) said...

அத்தத்தின் பத்தாம் நாள் விளக்கம் பெரியோர்களின் வியாக்கியான நூல்களில் படித்திருக்கிறேன். ஆனால் அத்தத் திருநாள் தாயார் பிறந்த நாள் என்ற தொடர்பு இன்று தான் அறிந்து கொண்டேன்.

தமிழ் said...

குமரன் (Kumaran) said...

அத்தத்தின் பத்தாம் நாள் விளக்கம் பெரியோர்களின் வியாக்கியான நூல்களில் படித்திருக்கிறேன். ஆனால் அத்தத் திருநாள் தாயார் பிறந்த நாள் என்ற தொடர்பு இன்று தான் அறிந்து கொண்டேன்.//

இரவி சங்கருக்குத்தான் நன்றிகள் சொல்லணும். ;-))