பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 17
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய*
திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற*
உருவுகரிய ஒளிமணி வண்ணன்*
புருவம் இருந்தவாகாணீரே பூண்முலையீர்! வந்துகாணீரே.

பதவுரை:
பருவம் நிரம்பாமே, பாரெல்லாம் உய்ய - பருவம் நிரம்பாத பாலகன், உலக உயிர்கள் அனைத்தும் உலகத்திலுள்ள துன்பங்களிலிருந்து விடுபடுவதற்காக (பார் - உலகம்; உய்ய - துன்பங்களிலிருந்து விடுபட)
திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற - திருமகளைப் போன்ற அழகான, தேவகி அன்னையின் திருவயிற்றில் உதித்த, அழகில் திருமகளை ஒத்தவளான,தேவகி அன்னைக்கு மகனாகப் பிறந்து; 'சீதக்கடல் உள் அமுதன்ன தேவகி' - நினைவிருக்கின்றதா?? சீதக்கடலின் வெளி அமுது - தேவாமிர்தம்; சீதக்கடலின் உள் அமுது - திருமகள்.
உருவு கரிய ஒளி மணிவண்ணன் - கரிய உருவத்தினனாய்ப் பிறந்த, நீலமணியொத்த வண்ணனின்
புருவம் இருந்தவாகாணீரே பூண்முலையீர்! வந்துகாணீரே - நீலமணிவண்ணனின் புருவம் இருக்கின்ற அழகினை வந்து பாருங்கள். மார்பில் அழகிய அணிகலன் அணிந்துள்ள பெண்களே, இந்த நீலமணி வண்ணனின், கரிய புருவம் எத்துனை அழகாய் அமைந்திருக்கின்றதென்று வந்து பாருங்கள்.
பதவுரை:
இந்த உலகம் உய்வதற்காக, திருமகளைப் போன்ற அழகான தேவகி அன்னைக்கு மகனாகப் பிறந்த, பருவம் நிறையாத, கரிய உருவத்தில் நீலமணி ஒத்த வண்ணமுடைய இந்த மழலைச் செல்வத்தின் கண் புருவம் எத்துனை அழகாய் அமைந்திருக்கின்றதென்று வந்து பாருங்கள். மார்பில் அழகிய அணிகலன் அணிந்துள்ள பெண்களே, இந்த நீலமணி வண்ணனின், கரிய புருவத்தின் அழகினை வந்து பாருங்கள்.

2 comments:
புருவமும் கருப்பு! ஆளும் கருப்பு! எப்படித் தெரியும்? அதான் கூப்பிட்டுக் காட்டுறாரு போல! :)
//சீதக்கடலின் வெளி அமுது - தேவாமிர்தம்; சீதக்கடலின் உள் அமுது - திருமகள்//
அட, சும்மா சொன்னா, உடனே இப்பிடியா பிடிச்சிக்கறது? :)
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
புருவமும் கருப்பு! ஆளும் கருப்பு! எப்படித் தெரியும்? அதான் கூப்பிட்டுக் காட்டுறாரு போல! :)
//சீதக்கடலின் வெளி அமுது - தேவாமிர்தம்; சீதக்கடலின் உள் அமுது - திருமகள்//
அட, சும்மா சொன்னா, உடனே இப்பிடியா பிடிச்சிக்கறது? :)//
குரு சொல்லைத் தட்டாதே!! ;-))
Post a Comment