Thursday, September 10, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 21

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 21 (தரவுகொச்சகக் கலிப்பா)

இப்பாசுரத்தை இருமுறை சேவிக்க வேண்டும்!

சுருப்பார்குழலி யசோதைமுன் சொன்ன*
திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன்*
விருப்பாலுரைத்த இருபதோடொன்றும்
உரைப்பார் போய்* வைகுந்தத் தொன்றுவார்தாமே.

பொருள்:

சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன - பூக்கள் மலர்ந்தவுடனேயே பறித்து, அவற்றைத் தொடுத்துச் சூடியதால், மலரிலுள்ள மது கூந்தலிலும் பரவியது. அதனால் வண்டுகள், மலரிலும், கூந்தலிலும் உள்ள மதுவினைச் சுவைப்பதற்காக யசோதை அன்னையின் கூந்தலில் அமர்ந்து, தேனைஉண்டு ஆர்ப்பரித்தன.

சுரும்பு + ஆர் - சுருப்பார்; சுரும்பு - வண்டு
''மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற்று எல்லாம் வல்லொற்று இறுதி கிளை ஒற்று ஆகும்'' - தொல் - குற்றியலுகரப்புணரியல் (9)

சுருப்பார் குழலி யசோதை முன் சொன்ன - வண்டுகள் அமர்ந்து ஆர்ப்பரிக்கும் கூந்தலையுடையவளான யசோதை அன்னை இதுவரை சொன்ன

திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன் - இறைவனின் திருவடி முதல் திருமுடி வரை அனைத்தையும், திருவில்லிப்புத்தூர் வாழ் புலவனான, விட்டுசித்தன் (திருகேசம் - கூந்தல், திருமுடி; தென்புதுவை - திருவில்லிப்புத்தூர்; பட்டன் - புலவன்)

விருப்பாலுரைத்த இருபத்தோடொன்றும் உரைப்பார் போய் - குழந்தை கண்ணன் மேல் கொண்ட ஆசையால் சொன்ன இந்த இருபத்திஒரு பாடல்களும் சொல்பவர்கள், நிச்சயம் சென்று

வைகுந்தத்தொன்றுவார் தாமே - இறைவனுடன் வைகுந்த நிலையில் நிலைபெறுவார்கள்.

பதவுரை:

வண்டுகள் தேனுண்டு ஆர்ப்பரிக்கும் கூந்தலையுடைய யசோதை அன்னை, குழந்தை கண்ணனின் திருவடி முதல் திருமுடி வரை அன்று சொல்லி மகிழ்ந்ததை, திருவில்லிப்புத்தூர் வாழும் கவிஞனான, விட்டுசித்தன், குழந்தை கண்ணபெருமான் மேல் கொண்ட அதீத அன்பினால் அவற்றை இந்த இருபத்திஒரு பாடல்களிலும் தந்துள்ளவற்றை, முழு விருப்பத்துடன் மனதாற பாடுபவர்கள், இறைவனின் திருவடி நிலையான வைகுந்த நிலையை அடைந்து என்றும் வாழ்வாங்கு வாழ்வர்.

25 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உரைப்பார் போய்* வைகுந்தத் தொன்றுவார்தாமே//

எனக்கு ஒரு சந்தேகம் தமிழ்/முகில்...
வைகுந்தம் என்றால் என்ன?
அது ஒரு இடமா? அது எங்கே இருக்கு? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குற்றியலுகரப்புணரியல்//

எங்கிட்டோ எப்பவோ படிச்ச ஞாபகம்-ன்னு ஒரு ஞாபகம் :)
சுரும்பார் குழலி = சுருப்பார் குழலி!
கரும்பு அஞ் சாறு = கருப்பஞ்சாறு!
இரும்புப் பாதை = இருப்புப் பாதை!
சரி தானே? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன்//

பட்டன்=புலவன்?
பாட்டன் தான் பட்டன்-ன்னு ஆச்சோ? இல்லை பட்டர் பிரான், பட்டர் என்பது பட்டன்-ன்னு ஆச்சா?

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//உரைப்பார் போய்* வைகுந்தத் தொன்றுவார்தாமே//

எனக்கு ஒரு சந்தேகம் தமிழ்/முகில்...
வைகுந்தம் என்றால் என்ன?
அது ஒரு இடமா? அது எங்கே இருக்கு? :)//

தெரியாமத்தான் கேக்குறேன்!!

ஒங்களுக்கே இது அதிகமா தோணல... ;-))

வைகுந்தம் என்பது ஏழு கடல், ஏழு மலை, பத்தொன்பது பள்ளத்தாக்குகள் தாண்டி இருக்கு!

அப்படின்னு சொன்னா நம்பவா போறாங்க... போறீங்க... ;-))

வைகுந்தம் என்பது ஒரு நிலை! பற்றற்ற நிலை... இன்பம், துன்பம் ஏதுமற்ற பேரானந்த நிலை.. இது ஆன்மாவுக்குத்தான்! தேகம் தான் பூமியில கிடைச்சது, பூமிக்கேப் போயிடும்...

இதுக்கு அப்புறம் நீங்களே வந்து வியாக்கியானங்கள் தாங்க... வழக்கம்போல... ;-))

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குற்றியலுகரப்புணரியல்//

எங்கிட்டோ எப்பவோ படிச்ச ஞாபகம்-ன்னு ஒரு ஞாபகம் :)
சுரும்பார் குழலி = சுருப்பார் குழலி!
கரும்பு அஞ் சாறு = கருப்பஞ்சாறு!
இரும்புப் பாதை = இருப்புப் பாதை!
சரி தானே? :)//

சரியாச் சொன்னீங்க... கரும்பு அம் சாறு ங்கறது, மரப்பெயர் கிளவிக்கு அம்மே சாரியை ன்னு அடுத்ததா வரும்...

வேம்பு மரம் - வேப்பு அம் மரம்

இஸ்ஸ்க்கூல் ல்ல படிச்சது... நான்!!

நீங்க தொல்காப்பியத்தையே, தண்ணியாக் குடிச்சிருப்பீங்க... ;-))

தமிழ் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//திருப்பாதகேசத்தைத் தென்புதுவைப்பட்டன்//

பட்டன்=புலவன்?
பாட்டன் தான் பட்டன்-ன்னு ஆச்சோ? இல்லை பட்டர் பிரான், பட்டர் என்பது பட்டன்-ன்னு ஆச்சா?//


பட்டன் என்பதே ஒரு சொல் தான்.

பாட்டனின் குறுக்கம் அல்ல.

பட்டர் பிரான் என்பது பாண்டியமன்னன் அளித்தப் பட்டம்.

இறைவனைப் பற்றிப் பாடும் போது, இப்படித் தன் பட்டத்தை எல்லாம் போட்டுப்பாங்களா என்ன?

தான் ஒரு சாதாரண அடியவன் என்ற எண்ணத்துடன் தான் இறைவனை வணங்கியிருப்பார் பெரியாழ்வார்.

தனக்குக் கிடைத்த பேராலும் புகழாலும் பாடியிருக்க மாட்டார் ன்னு நினைக்கிறேன்!

--தென் புதுவையில் வாழ்கின்ற, இறைவன் மேல் கவிபாடும் ஒரு புலவன் அப்படின்னுதான் வரும் ன்னு என்னோட துணிபு...

Radha said...
This comment has been removed by the author.
Anonymous said...

Perumalidam ooduruvi alwaargal paasurangal paadukinranar
Alwargal yosittu paaduvadillai .. alvaargal tiruvayil irundu perumal arulaal taanagave varum varigal
Ex: nammalwar. Padal varigalin Irudiyil oorodu peyaraiyum serthu paada vaikiraar perumaal.. Tirukurugoor sadagopan enru.
Ippadi paadiya adaiyalataaldaan pinbu piranda naadamunigal tirukurugoor senru nammalwaridam tavam purindu 4000 paasurangalaiyum perugiraar.
So perumaal alwargalidan peyaraiyum serthu paada vaipadu nanmaike .
(nichayamaaga alwargal peyarukkagavo pugalukkagavo peyarai serkavillai . alwaargalai perumaal paada vaitu irukiraar.
Tavaru irundaal adiyenai mannikavum. Idu em karuthu

Anonymous said...

தனக்குக் கிடைத்த பேராலும் புகழாலும் பாடியிருக்க மாட்டார் ன்னு நினைக்கிறேன்!

Sariyaaga sonnergal
Ex: nammalwaar. Avarai patri ninaikave avaruku neramillai perumalaiye enni kondu iruppaar.
nammalwar tan peyaraiyum ooraiyum arindirukka vaaipillai. Avaruku peyaraiyum vaittu ooraiyum kaati pada
Vaittu irukkirar perumal. Nammalwaarai polave pira alwargalaiyum paada vaittu iruppaar.
(manikkavum tamil – tamizhil type seiyya pazhaga villai – office-l neramillai)

Radha said...

பட்டர் = கோயில் அர்ச்சகர். :-)

Radha said...

// tamil – tamizhil type seiyya pazhaga villai //
ஐயா,
உங்களுக்கு நிச்சயம் இணையத் தொடர்பு இருக்கிறது என்று தெரிகிறது. இந்தத் தளத்திற்கு செல்லவும்:
http://www.google.com/transliterate/indic/tamil

"nichayamaaga alwargal peyarukkagavo pugalukkagavo peyarai serkavillai"

என்று நீங்கள் சொல்லிய கருத்தை அப்படியே அங்கே தட்டச்சு செய்தால் இப்படி வரும்.

"நிச்சயமாக ஆழ்வார்கள் பெயருக்க்காகவோ புகழுக்காகவோ பெயரை சேர்க்கவில்லை."

I typed "alwar" as "aazhwaar" and "pugal" as "pugazh". Rest of the words/letters are same.


If you type "naaraayaNaa" and press the space bar you can see the transliterated word - "நாராயணா".
Its as easy as that. :-)

முகவை மைந்தன் said...

சுருப்பார் - சுரும்பு + ஆர் அட்டடகாசம்.

வண்டு ஆர்க்கும் குழல்ன்னு படிக்கும் போதே இனிமையா இருக்கு. வண்டின் அசை தேமா, சுரும்பு புளிமா. இரண்டு வெண்பா இல்லை, இல்லை கலித்தாழிசைப் பாட்டு எழுதுனா இதோட அருமை தெரியும் :-)

@Radha, பட்டர்கள் (புலவர்கள்) பாடித் தொழுததால், பின்னர் பாடாது தொழுதவர்களுக்கும் பட்டர் என்று பெயர் வந்திருக்குமோ :-)

Radha said...

//@Radha, பட்டர்கள் (புலவர்கள்) பாடித் தொழுததால், பின்னர் பாடாது தொழுதவர்களுக்கும் பட்டர் என்று பெயர் வந்திருக்குமோ :-) //
அவ்வாறும் இருக்கலாம். ஆனால் பெரியாழ்வாருக்கு முன்னும் பின்னும் பாடித் தொழுத ஆழ்வார்கள், (மதுரகவி ஆகட்டும், சித்திர கவி திருமங்கை ஆழ்வார் ஆகட்டும்) அவர்களும் புலவர்கள் என்றாலும், எவரும் "பட்டர்" என்று தங்களை சொல்லிக் கொள்ளவில்லை. அதனால் இங்கு "பட்டர்" என்பது பெரியாழ்வார் செய்த வந்த பணியின் காரணம் பற்றி வந்த பெயர்...என்று எனக்கு தோன்றுகிறது. :)

Radha said...

// இரண்டு வெண்பா இல்லை, இல்லை கலித்தாழிசைப் பாட்டு எழுதுனா இதோட அருமை தெரியும் :-) //
எழுதாமலேயே உங்கள் ரசனை புரிகிறது. :)
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா !

Anonymous said...

tamil – tamizhil type seiyya pazhaga villai //
. இந்தத் தளத்திற்கு செல்லவும்:
http://www.google.com/transliterate/indic/tamil :)


ஓம் நமோ நாராயணாய
ஆஹா அருமை ராதா அக்கா ரொம்ப நன்றீங்க

தமிழ் said...

பட்டன் - கோயில் அர்ச்சகன், புலவன்

இரண்டுமே பொருந்தக் கூடியதுதான்.

எனக்கு ஒரு சந்தேகம்!!

பெரியாழ்வார், இறைவனுக்கு மலர்கைங்கர்யம் செய்ததாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவர் கோயிலில் அர்ச்சகராகவா இருந்தார்?? ;-))

தமிழ் said...

இறைவனையே மனதாற நினைத்து, அவனை தண்தமிழில், பாடித்துதிக்க ஆர்வம் கொண்டு இந்த வலைப்பூவினுக்கு வருகை புரிபவர்களுக்கு எங்கள் மனமாரந்த நன்றிகள்!!

இதுவரை நாற்பது பாசுரங்களால் இறைவனை, நாம் வணங்கியிருக்கின்றோம்!!

ஆனால், தமிழ்த்தாய் க்காகத் துவங்கப்பட்ட இவ்வலைப்பூவில் தமிழ் சம்மந்தப்பட்ட விவாதங்களும் வரவேண்டும் என்று விரும்புகிறோம். :-))

எத்தனையோ புதிய வார்த்தைகள்... பழைய வார்த்தைகள்தான், ஆனால் நாம் அறியாத சொற்கள், இலக்கணக்குறிப்புகள், யாப்பு, அணி, புணர்ச்சி இலக்கணம தொடர்பாகவும் விவாதிக்கலாமே! ;-))

ஆழ்வார் மொழிகளைப் பற்றி எழுதுகின்ற நாங்கள், ஓராண்டுக்கு முன்னமே, திருக்குறளுக்கான உரைகளும் எழுதினோம்.

ஒருவரும் திரும்பி பார்க்கவில்லை. ஒரு வாசகர் வந்திருந்தாலும், அதை இன்னும் சிறப்பாக செய்திருக்க முடியும். எங்களுக்கு ஊக்கமும் கிடைத்திருக்கும்.

மொழியும் இறைவன்தானே!

Radha said...

//பெரியாழ்வார், இறைவனுக்கு மலர்கைங்கர்யம் செய்ததாகத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அவர் கோயிலில் அர்ச்சகராகவா இருந்தார்?? ;-)) //
என்னுடையது கேள்வி ஞானம் தான். தவறாக இருக்கலாம். :-)

Radha said...

//அருமை ராதா அக்கா ரொம்ப நன்றீங்க //
அக்கா இல்லைங்க. என்னுடைய முழு பேர் ராதாமோகன். :-)

Anonymous said...

பட்டர் - கோயில் அர்ச்சகன், புலவன்


நல்ல வேளைப்பா பட்டர் - னா யாரும் வெண்ணை என்று சொல்லவில்லை

Rajewh said...

...Avvvvvvvvvv...

முகவை மைந்தன் said...

இந்த மாதிரி அல்வா வாங்குறது எல்லாம் பதிவுலகத்துல இயல்பு தான். விட்டுத் தள்ளுங்க கலவை.

கமலக்கன்னியம்மன் கலவை ஆனதன் காரணத்தைத் தெரிஞ்சுக்கலாமா?

Anonymous said...

கமலக்கன்னியம்மன் கலவை ஆனதன் காரணத்தைத் தெரிஞ்சுக்கலாமா?

vellore கலவை-il - daane sri kamalakanniamman temple

open id : kamalakanniamman
blogtittle: kalavai

ok

குமரன் (Kumaran) said...

அனைத்துப் பாசுரங்களும் படித்தேன் அன்பர்களே. இனி மேல் தமிழைப் பற்றியும் பேசுகிறேன் (பதிவர் தமிழைப் பற்றி பேசினால் தானே தவறு? முகில் கோவித்துக் கொள்வார்/கொல்வார்! :-) )

தமிழ் said...

நன்றிகள் குமரன். கண்டுபிடிச்சிட்டீங்களே! ஆமாம், என்னைப் பற்றிப் பேசினால், முகில் கோபித்துக் கொல்வார்கள்! :)))) (வேற வார்த்தைக்கு அங்க இடமே இல்லை :) )