Thursday, September 3, 2009

பெரியாழ்வார் திருமொழி 1 - 2 - 3

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
பாடல் 3

பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்த கொங்கை*
அணைத்தார உண்டு கிடந்த இப்பிள்ளை*
இணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும்*
கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர்! வந்துகாணீரே.

பொருள்:

சிவந்த பாதமலர்கள், நவஇரத்தினங்கள் மின்னும் விரல்கள்! இப்போது, கார்முகில் வண்ணனின் கணுப்பகுதியைக் காண்போம்!

பணைத்தோள் இளவாய்ச்சி பால்பாய்ந்த கொங்கை - மூங்கிலைப் போன்று வழுவழுப்பான, செழுமையான தோள்களையுடைய இளம் வயதுடைய, ஆய்ச்சியான யசோதையிடத்து, பால்நிறைந்த கொங்கைகளை (பணை - மூங்கில், செழுமை; கொங்கை - மார்பகம்)

அணைத்தார உண்டு கிடந்த இப்பிள்ளை - யசோதை ஆய்ச்சியிடத்து நிறைவாய் சுரந்திருந்த தாயமுதத்தினை, அவளை ஆதரவாய் அணைத்துக் கொண்டு, பசியாற பாலுண்டு, படுத்துறங்கும் இந்த பச்சிளம் பாலகனின்

இணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும் - இரண்டு கால்களிலும் வெள்ளியால் செய்த காற்சிலம்பு விளக்கமாய் அமைந்து ஒளிவீசும் (இணை - இரண்டு; தளை - கால் சிலம்பு; இலங்கும் - மின்னும், ஒளிரும்)

கணைக்கால் இருந்தவா காணீரே காரிகையீர்! வந்துகாணீரே - இரண்டு கால்களிலும், வெள்ளியில் செய்த காற்சிலம்பு அமைந்து ஒளிவீசும் அழகிய கணுக்காலினை வந்து பாருங்கள். அழகிய பெண்களே, என் கண்ணனின், கணைக்கால் எத்துனை அழகாய் இருக்கின்றதென்பதை வந்து பாருங்கள்! (கணைக்கால் - கணுக்கால்; காரிகை - பெண், அழகு)

பதவுரை:

மூங்கிலைப் போன்று வழவழப்பும் உறுதியும் கொண்ட செழிப்பான தோள்களையுடைய, இளமையான யசோதை ஆய்ச்சியினை ஆதரவாய் அணைத்துக் கொண்டு, அவளிடம் பசியாற தாயமுது உண்டு, படுத்துறங்கும் இந்த பச்சிளம்பிள்ளையின், இரண்டுகால்களிலும், வெள்ளியால் செய்த கால்சிலம்பு, அவன் வண்ணத்திற்கு ஏற்றாற்போற் எடுப்பாய் மின்னுகின்ற அந்த கணுக்காலின் அழகினை, அழகிய பெண்களே வந்து காணுங்கள்!

4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பணைத்தோள் இளவாய்ச்சி பால்பாய்ந்த கொங்கை//

நாலே சொல்லுல எத்தினி விஷயம் சொல்லிப்புட்டாரு! சான்ஸே இல்லை! :)

பணைத் தோள் = மூங்கில் போல் கிண்ணுன்னு இருக்கும் தோள்! பிள்ளை பெற்ற பின்னாலும் யசோதை வெயிட் போட்டு விடாமல், உழைத்து, வாகாக வைத்துள்ளாள்!கூன் விழாத நேர் நேர் மூங்கில் தோள்கள்!

இளவாய்ச்சி = இளமையான ஆய்ச்சி!

பால்பாய்ந்த கொங்கை = பால் பாயுதாம்! குழந்தைக்குப் பாலூட்ட பாலூட்டத் தான் தாய்க்குச் சுரக்கும்! அப்படிப் பால் பாயும் திரு மார்பகங்கள்!

எதிர் பொங்கி மீதளிப்ப, மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்-ன்னு இவரு பொண்ணு பாடுவதில் வியப்பொன்றும் இல்லை தான்!

Radha said...

//அவளிடம் பசியாற தாயமுது உண்டு, படுத்துறங்கும் இந்த பச்சிளம்பிள்ளையின், இரண்டுகால்களிலும், வெள்ளியால் செய்த கால்சிலம்பு, அவன் வண்ணத்திற்கு ஏற்றாற்போற் எடுப்பாய் மின்னுகின்ற அந்த கணுக்காலின் அழகினை//
thanks thamizh sir! crisp and complete explanation at a brisky pace !! god bless you ! :-)
ravi said...
//இவரு பொண்ணு பாடுவதில் வியப்பொன்றும் இல்லை தான்!//
appa !! for a change, periyaazhwaarukku importance koduthu irukkeenga. :-)
"yasodhai ilanjingam"-la irundhu aarambichu "kannaalam" appadinnu onga thozhi local-a use panra ellam ava appakitta irundhu vandhadhunnu sonnaa ennai adikka varuveengalaa? :-))

தமிழ் said...

@KRS...
கூன் விழாத நேர் நேர் மூங்கில் தோள்கள்!//

தோள் எப்படிங்க கூனாகும்?? முதுகு ல்ல தான கூன் விழும்... ;-))

தோள்பகுதி தளர்ச்சி அடையலாம், சுருக்கம் பெறலாம்... ஆனால், கூன்ன்ன்...??? புரியலையே.... ;-))

தமிழ் said...

@Radha....

thanks thamizh sir! crisp and complete explanation at a brisky pace !! god bless you ! :-)//

அப்பாடி! தொர இங்கிலீசுல்லாம் பேசுது... ;-))

"yasodhai ilanjingam"-la irundhu aarambichu "kannaalam" appadinnu onga thozhi local-a use panra ellam ava appakitta irundhu vandhadhunnu sonnaa ennai adikka varuveengalaa? :-))//

அடிக்க வருவீங்களா ன்னு யார கேக்குறீங்க இராதா?? ;-)) உண்மையச் சொன்னதால ஆரும் அடிக்கமாட்டாங்க... ;-))